பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் Chicken Tenders- இனி வீட்டிலேயே செய்யலாம்
சிக்கன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சிக்கனை வெறுமனே குழம்பு வைத்து மட்டும் உண்ணவேண்டிய அவசியமில்லை.
அதை வைத்து நிறைய ரெசிபிக்கள் செய்யலாம்.
சரி இனி, சிக்கனை வைத்து சிக்கன் டென்டெர்ஸ் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
image - betty croker
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
சோள மா - 1/4 கப்
ப்ரெட் - 1 துண்டு
மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி
இட்டாலியன் சீசனிங் - 1 1/2 பழத்தின் சாறு
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
மைதா மா - 1/4 தேக்கரண்டி
இஞ்சி, வெள்ளைப் பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சில்லி ப்ளேக்ஸ் - 1 தேக்கரண்டி
வால் நட் - 1/2 கப்
எலுமிச்சை பழச்சாறு - 1/2 பழத்தின் சாறு
உப்பு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
image - all recepies
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் ப்ரெட்டை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு, அதனுடன் மிளகாய் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், இட்டாலியன் சீசனிங், எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி வெள்ளைப் பூண்டு விழுது, எண்ணெய் 2 தேக்கண்டி என்பவற்றை சேர்த்து 30 நிமிடங்க்ள ஊறவிட வேண்டும்.
அதன் பின்னர் நறுக்கிய ப்ரெட் துண்டு, சில்லி ப்ளேக்ஸ், வால் நட், மிளகுத் தூள், இட்டாலியன் சீசனிங், உப்பு என்பவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அதன்பின்பு ஒரு பாத்திரத்தில் சோள மா, மைதா மா என்பவற்றை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஊறவைத்த சிக்கனை மாவில் தோய்த்து பின்பு வால்நட் ப்ரெட் தூளில் பிரட்டி வைக்கவேண்டும்.
இறுதியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
image - eatingwell