சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி... அசைவ பிரியர்களே அலார்ட்
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர்
சில தினங்களுக்கு முன்பு நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், அவருடன் சாப்பிட்ட சிலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பர்கர் சாப்பிட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அடுத்தடுத்து துரித உணவுகளை சாப்பிட்டு அடுத்தடுத்து பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 26 வட மாநில தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி ஹொட்டல் ஒன்றில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வடமாநில தொழிலாளர்களுக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஹொட்டல்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |