Chicken Fry: அடுத்தமுறை சிக்கனை இப்படி வறுவல் செய்யுங்க
பொதுவாக வீடுகளில் விடுமுறை தினங்களில் சிக்கன் சமைப்பார்கள்.
வாரம் வாரம் ஒரே மாதிரியான ரெசிபி செய்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு போரடித்து விடும்.
அந்த வகையில் இந்த வாரம் வீட்டில் மணமணக்க சிக்கன் வறுவல் எப்படி செய்யலாம் என்பதனை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன் - 1/2 கிலோ
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 2
- இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிதளவு
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்
- பட்டை - 2
- கிராம்பு - 3
- ஏலக்காய் - 3
- மராட்டி மொக்கு -1
- அன்னாசி பூ -1
- கல்பாசி - சிறிதளவு
- தனியா - 2 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- முந்திரி- 10
- பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
- கசகசா - 1 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 5 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
சிக்கன் வறுவல் செய்முறை
முதலில் வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வறுத்து அரைக்கவும்.
பின்னர் சீரகம், பெருஞ்சீரகம்,கசகசா, தேங்காய் துருவிய பூ கடாயில் போட்டு அரைக்கவும்.
இதெல்லாம் முடிந்த பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க தேவையான பொருட்களை கொட்டி வாசம் வரும் வரை தாளிக்கவும்.
இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இதனிடையே சிக்கன் துண்டுகளை வாணலியில் போடவும். கிளறிக் கொண்டே வறுத்து அரைத்து வைத்திருக்கும் பொடியை போட்டு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
சரியாக 20 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சூடான சுவையான சிக்கன் வறுவல் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |