நாவூறும் சுவையில் சிக்கன் சுக்கா... இனி இப்படி செய்ங்க வெறும் 15 நிமிடங்கள் போதும்
பொதுவாகவே அசைவ பிரியர்களின் உணவு பட்டியலில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது. சிக்கனை பல வகைகளில் செய்து சாப்பிட்டிருப்போம்.
ஆனால் சிக்கன் சுக்காவை பெரும்பாலானவர்கள் செய்திருக்க மாட்மார்கள். இது சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என அனைத்து உணவுகளுடனும் சிறப்பாக பொருந்தும்.
அந்தவகையில் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் வகையில் நாவூறும் சுவையில் சிக்கன் சுக்காவை வெறும் 15 நிமிடங்களை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - ½ கிலோ கிராம்
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - ½ தே.கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தே.கரண்டி
பச்சை மிளகாய் - 2
வரமிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
சின்ன வெங்காயம் - 10-12
மிளகு தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - ½ தே.கரண்டி
மல்லித்தூள் - 1 தே.கரண்டி
கஸ்தூரி மேத்தி - 2 தே.கரண்டி
எலுமிச்சை - ½ பழம்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
பட்டர் - 3 தே.கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
கல்பாசி - சிறிதளவு
அன்னாசி பூ - 2
தயிர் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி தண்ணீர் சேர்த்து நன்றாக அலசி கழுவி, ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சிக்கன் உடன் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் வர மிளகாயை ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மல்லித்தூள், கஸ்தூரி மேத்தி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி , பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, மற்றும் அன்னாசி பூ ஆகியவற்றை போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த மாசாலா பொருட்களின் பொடியை சிக்கன் உடன் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் புளிப்பில்லாத தயிர், எலுமிச்சை சாறு, எண்ணெய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து சுமார் 30 நிமிடங்கள் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அமுப்பில் வைத்து,வெண்ணெய் சேர்த்து உருகியதும் கலந்து வைத்த சிக்கனை சேர்த்து கிளறிவிட்டு மூடி வேகவிட வேண்டும்.
இடையிடையே கிளறிவிட்டு 8 முதல் 10 நிமிடங்களுக்கு நன்றாக வேக வைத்து இறுதியில் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் சிக்கன் சுக்கா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |