அர்ஜுனின் பாதி சொத்தை வரதட்சணையாக வாங்கினாரா உமாபதி..?பிரபலம் பகிர்ந்த ரகசியம்
“அர்ஜீன் மகளை திருமணம் செய்து கொள்வதற்கு உமாபதி பாதி சொத்தை வரதட்சணையாக வாங்கினார்.” என செய்யாறு பாலு பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அர்ஜுன் மகள் திருமணம்
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் - ஐஸ்வர்யா, தம்பி ராமையா - மகன் உமாபதி சில வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் பிரமாண்டமாக சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் முன்னிலையில் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த கையோடு மகள், மருமகனுடன் நடிகர் அர்ஜீன் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை வைத்து சர்ச்சைகளுக்கு முடிவு கட்டியுள்ளார்.
பாதி சொத்து வரதட்சணையா?
இதன் பின்னர் ஐஸ்வர்யா மற்றும் உமாபதி சர்ச்சைகள் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், அர்ஜுன் மகளுக்காக பாதி சொத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளார் என பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.
அதில், “நடிகர் அர்ஜுன் மகள் திருமணத்திற்காக 500 கோடி ரூபாய், 1000 கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. மேலும் சிலர் திருமணத்தில் 1000 வகையான சாப்பாடுகள் பரிமாறப்பட்டன என்கிறார்கள். ஆனால் இவையனைத்தும் சமூக வலைத்தளங்களில் வரும் தகவல் மாத்திரமே..
நடிகர் அர்ஜுனுக்கு ஆண் வாரிசு இல்லை. எனவே அவர் வைத்திருக்கும் சொத்துக்கள் எல்லாமே அவரது இரண்டு மகள்களுக்கு தான்" என பேசியிருக்கிறார்.
இந்த பதிவை பார்த்த பலரும், “ அப்போ நடிகர் அர்ஜீனின் பாதி சொத்துக்கு ஐஸ்வர்யா தானே உரிமையாளர். அவற்றை வரதட்சணையாக கொடுத்துவிட்டாரோ? ” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |