செவ்வாய் பெயர்ச்சியில் சிக்கும் ரிஷப ராசிக்காரர்கள்: 18ஆம் திகதியில் இருந்து அதிக கவனம் தேவை!
நவக்கிரகங்களுக்கு அதிபதியான செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒரு முறை இடப்பெயர்ச்சி அடைகிறார்.
இவரின் இடப்பெயர்ச்சியால் சுப, அசுப பலன்கள் கிடைக்கும். அப்படி செவ்வாய் பகவான் ஜுலை 1ஆம் திகதி சிம்ம ராசியில் பிரவேசித்து ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை இருப்பார் என்று ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெயர்ச்சியில் பல ராசிக்காரர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படும். அதில் சிலருக்கு இந்த பெயர்ச்சி அவர்களின் வாழ்க்கையின் புதிய திருப்புமுனையாக இருக்கும்.
அந்தவகையில், இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியில் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் என்பதைப் பார்ப்போம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு
12 ராசிக்காரர்களுக்கு 2ஆம் ராசியாக இருக்கும் ரிஷப ராசியானது செவ்வாய்ப் பெயர்ச்சியில் பல சிக்கல்களை சந்திக்க உள்ளது.
அதாவது கிரகங்களில் ஆக்ரோஷமான கிரகமான இருப்பது செவ்வாய் பகவான் தான் அதனால் உறவில் பிரச்சினையும் பாதுகாப்பு சிக்கல்களும் ஏற்படும்.
வாழ்க்கைத் துணையுடன் கசப்பான சம்பவங்கள் ஏற்படும். உடற்பயிற்சி செய்வதிலும் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் வேண்டும். சொத்துப் பிரச்சினைகளிலும் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் போது அதிக கவனம் வேண்டும்.
கன்னிராசியில் செவ்வாய் பகவான் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்கள் ராசிக்காரர்கள் எந்த விடயம் செய்தாலும் கவனம் எடுத்து செய்தல் வேண்டும்.
செவ்வாய் பெயர்ச்சி தினத்தில் செவ்வாய் கிரகத்திற்கு அதிகதியாக இருக்கும் முருகனை வழிபட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |