செட்டிநாடு ஸ்பெஷல் மிளகாய் துவையல்... வெறும் 5 நிமிடம் போதுமாம்
காரமும், சுவையும் அதிகமாக இருக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் மிளகாய் துவையல் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செட்டிநாடு உணவுகள் என்றாலே காரம் அதிகமாக இருக்கும். அதிலும் மிளகாய் அதிகமாக சேர்க்கப்படுகின்றது. மிளகாயை சட்னி, குழம்பு இவற்றில் காரத்திற்காக சேர்ப்பார்கள்.
ஆனால் வெறும் மிளகாய் மட்டுமே வைத்து துவையல் செய்தும் சாப்பிடுகின்றனர். இந்த பதிவில் செட்டிநாடு ஸ்பெஷல் மிளகாய் துவையல் செய்வதை குறித்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
வத்தல் மிளகாய் - 8 – 10 (அல்லது சுவைக்கு ஏற்ப)
சுண்டைக்காய் வத்தல் (விருப்பமாக) - 1 டீஸ்பூன்
இஞ்சி துண்டு - 1 அங்குலம்
பூண்டு பல் - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை
வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்க்கவும். பின்பு வெந்தயம், வத்தல் மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு புளியையும், உப்பையை எடுத்துக் கொண்டு, அதில் தண்ணீர் தெளித்து சற்று ஊற வைத்து பசையாக அறைத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து வறுத்த எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். தற்போது சுவையான மிளகாய் துவையல் தயார்.
வெந்தயம் அதிகமாக சேர்த்தால் கசப்பு அதிகமாகும். அதே போன்று மிளகாய் வத்தலையும் கருக்காமல் வதக்க வேண்டும்.
இதில் சேர்க்கப்பட்டுள்ள பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவும், வெந்தயம் சூட்டைக் குறைக்கவும், செரிமான பிரச்சனையை போக்கவும் செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |