ஹோட்டல் சுவையை மிஞ்சும் செட்டிநாடு சிக்கன் பிரியாணி: இனி நீங்களும் வீட்டிலேயே செய்யலாம்
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு வகையான உணவுகள், பாரம்பரிய உணவுகள் என பலவாறு இருந்தாலும் பிரியாணி என்றால் பலருக்கு வாயில் எச்சில் ஊறும்.
பிரியாணியில் ஐதராபாத் பிரியாணி, லக்னோ பிரியாணி மற்றும் கொல்கத்தா பிரியாணி என பலவகைகளில் உள்ளது. அதிலும் இந்த செட்டிநாடு சிக்கன் பிரியாணி என்று சொன்னாலே நாவில் எச்சூறும்.
அப்படி சுவை நிறைந்த பிரியாணியை இனி ஹோட்டலில் சாப்பிடாமல் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன் துண்டுகள் - 1 கிலோ
- சீரக சம்ப அரிசி - 1 கிலோ
- மிளகு - 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 8
- சீரகம் - 1 தேக்கரண்டி
- பட்டை - சிறிய துண்டு
- ஏலக்காய் - 4
- கிராம்பு - 5
- முந்திரி - 25 கிராம்
- கசகசா - 1 தேக்கரண்டி
- தேங்காய் பால் - 3 கப்
- வெங்காயம் தக்காளி - கால் கிலோ (பொடியாக நறுக்கியது)
- எழுமிச்சைப் பழம் - 2 (சாறு பிழிய)
- நெய் -100 கிராம்
- எண்ணெய் - 100 மில்லி
- சோம்பு - 1/2 தேக்கரண்டி
- புதினா - ஒரு கட்டு
- கொத்தமல்லி தழை - ஒரு கட்டு
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தேவையான அளவு
செய்முறை
முதலில் அசிரியை அரை மணிநேரம் ஊறவிடவும் பிறகு சிறிதளவு புதினா, கொத்தமல்லிதழையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிளகுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி, கசகசா, சோம்பு என்பவற்றை மிக்சியில் சேர்த்து தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
கடினமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை என்பவற்றை சேர்த்து தாளிக்கவும்.
அதில் வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் இஞ்சிபூண்டு விழுது மற்றும் அரைத்து எடுத்துக் கொண்ட விழுது, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதனுடன் சிக்கன், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து மசாலா போல வதக்கிக் கொள்ளவும்.
அதிலே தேங்காய்பால் 3 கப், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
பிறகு அரிசி சேர்த்து முக்கால் வேக்காடு பதத்தில் வேக விட்டு நெய், கொத்தமல்லி தழை, புதினா என்பவற்றை சேர்த்து இறக்கி மூடி வைக்கவும்.
பின்னர் தவாவை சூடாக்கி அதன் மீது பிரியாணி பாத்திரத்தை வைத்து சிறு தீயில் 15 நிமிடங்கள் வரை தம் போடவும்.
பிறகு மேலே சிறிதளவு கொத்தமல்லிதழையை தூவி இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பறிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |