Wow... சென்னை, தெலுங்கானாவில் பெய்த ஆலங்கட்டி மழை... - ரம்மியமான வீடியோ...!
சென்னை, கர்நாடகாவில் பெய்த ஆலங்கட்டி மழை
நேற்று இரவிலிருந்து சென்னையிலும், அதன் சுற்றுப்புறத்திலும் நல்ல மழை பெய்தது. இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சென்னை வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதேபோல், தமிழக கர்நாடக எல்லையான ஓசூர் அடுத்த பாகலூர் என்ற ஊரில் இன்று காலை ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
தெலுங்கானாவில் உள்ள பல பகுதிகளிலும் ஆலங்கட்டி பெய்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.
சிலர் ஆச்சரியத்தோடு அதைக் கண்டு ரசித்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Heavy rains with Hailstorm in some places of Telangana... ??⛈️❄️ #Telangana #Telanganarains #rain #hailstorm pic.twitter.com/vN0o31FzUN
— Telugu Swaggers (@Telugu_Swaggers) March 16, 2023
சென்னை பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்கிறது. https://t.co/AG6NuImIdv
— TUTY SALT PAN WEATHER (Ramanathan) (@ramanathan4548) March 17, 2023
சென்னை வேளச்சேரியில் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை#ChennaiRains | #Hail | #Velachery pic.twitter.com/9tEWIJKCHc
— Hema (@Arulnambi15) March 17, 2023