சிஎஸ்கே பவுலர்களை ஊதித்தள்ளி சும்மா மரண அடி அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.2) டபுள் ஹெட்டர்ஸில், இரண்டாம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.
முடிவில், ராஜஸ்தான் 17.3வது ஓவரில் 190 ரன்கள் அடித்து, மெகா வெற்றியை சேஸிங்கில் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் 2 புள்ளிகளை பெற்றது மட்டுமின்றி, ரன் ரேட்டையும் ராஜஸ்தான் அணி எகிற வைத்துள்ளது.
12 போட்டிகளில் தனது 5வது வெற்றியை அந்த அணி பதிவு செய்திருக்கிறது. இந்த மெகா வெற்றி காரணமாக அவர்களது ரன்ரேட் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.
இப்போது -0.337 ரன் ரேட் பெற்று, புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு முன்னேறிவிட்டது.
அதேசமயம், 12வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணிக்கு, இது மூன்றாவது தோல்வியாகும்.