திருமணமாகி 6 மாதத்தில் இளம் தம்பதி தற்கொலை
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் வயது 22. இவர், சென்னை ஆலப்பாக்கம் தனலட்சுமி நகரில் பழைய இரும்புகளை விற்கும் கடை நடத்தி வந்துள்ளார்.
இவருக்கும் கடந்த ஜனவரி மாதம் ஆர்த்தி என்ற 20 வயது பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
சந்தோஷமாக வசித்து வந்த நிலையில் இவர்களுக்கு உறவினர்கள் செல்போனில் அழைத்தபோது இருவரும் போனை எடுக்கவில்லை. கடையும் அடைக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து செல்ல சென்று பார்த்தப்போது கணவன், மனைவி இருவரும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.

பின்னர், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் எழுதிய தற்கொலை கடிதத்தில், கணவர் “எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற முடியாது.
இதனால் நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம். இதில் யாருக்கும் எந்த சம்மதம் இல்லை” என இருவரின் கையெழுத்து இருந்துள்ளது.

6 மாதத்தில் தற்கொலை
மேலும், திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் உறவு கொள்ளும்போது கணவரின் ஆண்குறி நரம்பு உடைந்துவிட்டதாகவும், அதன் பின்னர் அவரால் உறவு வைத்துக்கொள்ள முடியாமல் போனதாலே இந்த நிலை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவரை அணுகாமலேயே திருமணமாகி 6 மாதத்தில் இருவரும் தற்கொலை முடிவை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.