தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலி - பரபரப்பு வீடியோ வைரல்!
சென்னை, நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர்கோயில் திருவிழாவில் 5 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளத்தில் மூழ்கி 5 பேர் பலி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
சென்னை, நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின் போது அர்ச்சகர்கள் குளத்தில் இறங்கி வழிபாடு செய்துக்கொண்டிருந்தனர். அப்போது, முதலில் ஒருவர் மட்டுமே ஆழமான பகுதிக்குள் தவறி விழுகிறார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால், இச்சம்பவத்தில் ராகவன், லோகேஸ்வரன், பானேஷ், சூர்யா, ராகவன் உள்ளிட்ட 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் குளத்தில் இறங்கி 5 பேரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த 5 பேரும் 20 முதல் 25 வயது கொண்ட படித்த இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#VIDEO || சென்னை: தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளத்தில் மூழ்கும் நபர் பரபரப்பு காட்சி!https://t.co/gkgoZMHWlc | #Chennai | #Nanganallur pic.twitter.com/PhzzMc1EsX
— Indian Express Tamil (@IeTamil) April 5, 2023