உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் லிங்க முத்திரை!
மதுரை சித்தா டாக்டர். சாலை ஜெய கல்பனா கண்டுபிடித்த 'லிங்க முத்திரை'யை சென்னை ஐ.ஐ.டி. அங்கீகரித்துள்ளது.
உடலில்ஆக்சிஜன் குறைவால் தவிப்போர் 'லிங்க முத்திரை' செய்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும், காய்ச்சலை குறைக்கும் என மதுரை சித்தர் வனம் மருத்துவமனை தலைமை டாக்டர். சாலை ஜெய கல்பனா தன் கொரோனா தடுப்பு முறை ஆய்வில் கண்டறிந்தார்.
லிங்க முத்திரை ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் என ஐ.ஐ.டி., உறுதிப்படுத்தி உள்ளதாகவும், இதயம், நாடித் துடிப்பு சீராவதும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதை ஆய்வுசெய்த சென்னை ஐ.ஐ.டி., தொடு உணர்வு ஆய்வக தலைவர் மணிவண்ணன் சான்று அளித்துள்ளார். ஐ.ஐ.டி., சார்பில் சர்வதேச இதழ் ஒன்றில் ஆராய்ச்சி கட்டுரையும் ஐ.ஐ.டி.,வெளியிட்டுள்ளது.
முத்திரை செய்வதால் உடல் வெப்பம் அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தி துாண்டப்பெற்று கொரோனா உள்ளிட்ட வைரஸ் கட்டுக்குள் வரும். ஆக்ஸிஜன் அளவு கணிசமாக உயர்ந்து, சுவாசம் சீராகும்.
கர்ப்பிணிகள் தவிர சிறுவர்கள், முதியோர், சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோயாளிகள், கொரோனா சிகிச்சை பெறுவோர், செயற்கை ஆக்ஸிஜனில் இருப்பவர்களும் இந்த முத்திரையை செய்யலாம்.
லிங்க முத்திரை செய்யும் முறைஅமர்ந்த, படுத்த நிலையில் முத்திரை செய்யலாம். ஆள்காட்டி விரலை மூக்கின் அடியில் வைத்து மூச்சை கவனிக்கவும்.
எந்த நாசி துவாரத்தில் குறைந்த மூச்சு வருகிறது அல்லது அடைத்துள்ளதோ அந்தப் பக்கம் உள்ள கை கட்டை விரலை செங்குத்தாக உயர்த்தவும்.
மற்றொரு கையின் ஆள்காட்டி, கட்டை விரலால், உயர்த்தி பிடித்த கட்டை விரல் அடியில் சுற்றி வளைத்து, இரு கைகளின் மற்ற விரல்களையும் கோர்க்கவும்.
இரு கைகளுக்கும் இடையே காற்று புகாதபடி இறுக்கமாக பிடிக்கவும். இதை செய்ய தொடங்கி 5 முதல் 40 நிமிடத்தில் நெற்றி, மூக்கு, தொண்டை, நெஞ்சு பகுதி வெப்பம் அதிகரித்து, வியர்க்கும் போது நிறுத்த வேண்டும் என்றார்