டாக்டர் ப்ளீஸ்.. ப்ளீஸ்... உயிரை காப்பாத்துங்க! தெருவில் நின்று கதறும் உறவுகள்... நெஞ்சை பதற வைக்கும் காட்சி
சென்னையில் கொரோனா தீவிமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
சமீபத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸ்கள் வரிசையாக காத்துக்கிடந்த காட்சிகள் வெளியானது.
அதே போல் ஸ்டான்லி மருத்துவமனையிலும் ஆம்புலன்ஸ்கள் காத்துக்கிடக்கும் காட்சிகள் வெளியானது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடந்த காட்சி இது.
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) May 6, 2021
இந்தக் கதறலைப் பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. வரும் நாட்களை எண்ணிப் பெரும் அச்சமும், கவலையும் சூழ்கிறது! pic.twitter.com/Hf4YpFHIc9
இந்நிலையில், தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் உயிருக்கு போராடும் நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்களின் உதவி கேட்டு கதறும் வீடியோ வெளியாகி பதற வைத்துள்ளது.
குறித்து வீடியோவில், ஆம்புலன்ஸில் நோயாளி உயிருக்கு போராட, அருகில் இருக்கும் உறவினர் டாக்டர் ப்ளீஸ்..ஹெல்ப் மீ.. ப்ளீஸ்.. ப்ளீஸ் என கதறுகிறார்.
ஆம்புலன்ஸ்க்கு அருகே இருக்கும் மற்றொரு நபர், மேடம் வாங்க மேடம்... ஒரே ஒரு செகண்ட் உயிரை காப்பாத்துங்க மேடம் என கதறுகின்றனர்.
குறித்த காட்சி வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் கொரானா அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
மக்களே எச்சரிக்கையுடன் இருங்கள்.... நாளை எமது உறவுக்கும் இந்த அவல நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.