நிம்மதியான சாவு வந்தா போதும்.. மனைவியை தனிமையில் விட்டு சென்ற சீரியல் நடிகரின் கவலை
“ நிம்மதியான சாவு வந்தா போதும்..” என சீரியல் நடிகர் அர்ணவ் பேசிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் அர்ணவ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செல்லம்மா சீரியல் நடித்து பிரபலமாகியவர் தான் சின்னத்திரை நடிகர் அர்ணவ்.
இவர் திவ்யா என்ற சீரியல் நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையொன்றும் இருக்கிறது.
ஆனால் இவர்கள் இருவரும் தற்போது ஒன்றாக இல்லை. பல சண்டைகளுக்கு அப்புறம் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
செல்லம்மா சீரியல் நடிக்கும் பொழுது நடிகை அன்ஷிதாவுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். இது தொடர்பாக அவருடைய மனைவி சில காணொளிகளை பகிர்ந்திருந்தார்.
நீண்ட நாட்களுக்கு பின் மனந்திறந்த அர்ணவ்
இந்த நிலையில், திருமணம் வாழ்க்கைக்கு குறித்தும், அதனால் அர்ணவ் அனுபவித்த இன்னல்கள் பற்றியும் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில், “என் வாழ்க்கையில் திருமணம் ஆன நாளை மறக்க வேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறேன். அதனை நினைக்கும் பொழுது நிம்மதியான சாவு ஒன்று வேண்டும் என தோணும். உயிரோடு இருப்பதால் தான் இப்படியான பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
இறந்து விட்டால் இவற்றையெல்லாம் பார்க்க வேண்டியது இல்லை. போட்டி, பொறாமை, துரோகம் என பல விஷயம் வாழ்க்கை உள்ளது. நானாவது கேமரா முன் நடிக்கிறேன். பலர் நிஜ வாழ்க்கையில் நடிக்கிறார்கள். இதனை பார்க்க ஏன் கடவுள் இந்த உலகில் என்னை படைத்தார்...” என சோகமாக கடந்த காலங்களை பற்றி பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அர்ணவின் பேட்டிக்கு திவ்யா என்ன பதிலடிக் கொடுப்பார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |