குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் யார்...? இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பிரபல சமையல் கலைஞரும் தொழிலதிபருமான மாதம்பட்டி ரங்கராஜின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 400 திருமணங்களுக்கு பிரமாண்டமான விருந்துகளை தயார் செய்து வருகிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். பென்குயின் எனும் திரில்லர் படத்திலும் நடித்துள்ளார்.
கோயம்பத்தூரைச் சேர்ந்த இவர் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இவரின் தந்தை ஒரு சமையல் ஜாம்பவான். அவருக்கு "மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட்" என்ற நிறுவனமுள்ளது.
தந்தையை பார்த்து வளர்ந்த மகனுக்கும் இந்த தொழில் மீது பிரியம் ஏற்பட்ட நிலையில் தற்போது பல பிரபலங்களுக்கும் சமைத்துக்கொண்டு வருகிறார்.
இவர் சமைத்த உணவை சாப்பிடாத பிரபலங்களே இருக்க முடியாது என்றளவிற்கு இவர் சமைக்கிறார். இவர் தனது சிறு வயதில் இருந்து தனது தந்தையுடன் சமைக்கு இடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். எங்கு சமைக்க சென்றாலும் தனது தந்தையை பார்த்து, ''சமையல்காரன் வந்துட்டானா'' என்று தான் கேட்பார்கள்.
அதன் காரணமாகவே தான் சமையல் தொழிலையும் கார்ப்பரேட் அளவுக்கு கொண்டு சென்றுள்ளேன் என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
சமையல் தொழில் பல சாதனைகளை படைத்தது வரும் மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது குக் வித் கோமாளி 5வது சீசனில் நடுவாரக பற்கேற்றுள்ளார்.நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சொத்து மதிப்பு
மாதம்பட்டி ரங்கராஜின் நிகர மதிப்பு சுமார் 4 மில்லியன் டாலர்கள் ஆகும். பிரபல சமையல் கலைஞரான இவர், தமிழகத்தில் மிகப்பெரிய சமையல் தொழிலை செய்து வருகிறார்.
அவர் தனது நிறுவனத்தில் 1000-க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு வைத்து பிரமாண்டமாக சம்பாதித்தும் வருகிறார். இவருக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் பல சொத்துக்கள் உள்ளன. அவரிடம் சொகுசு வாகனங்களும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |