பன்னீர் ஃப்ரை செய்யணுமா? இருக்கவே இருக்கு செஃப் தாமுவின் ரெசிபி
பன்னீர் என்பது பொதுவாக பாலில் செய்யப்படும் ஒரு உணவாகும். இதில் பல வகையான ரெசிப்பிகளை செய்யலாம். இந்த பதிவில் வித்தியாசமான முறையில் செஃப் தாமுவின் ஸ்டைலில் எப்படி பன்னீர் ப்ரை செய்யலாம் என்பதை இந்த பதிவில் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
இந்த சுவையான ரெசிபி செய்ய வெறும் பத்து நிமிடம் மட்டும் போதும் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்
- பன்னீர் – 200
- கிராம் குழம்பு மசாலா தூள் – ஒன்றரை டீஸ்பூன்
- இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
- கார்ன்ஃ ப்ளார் – 1 டீஸ்பூன்
- அரிசிமாவு -அரை டீஸ்பூன்
- உப்பு – கால் டீஸ்பூன்
- எலுமிச்சம்பழச் சாறு – அரை டீஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் பன்னீரை சதுரமாக வெட்டி தனியே எடுத்து வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார் மாவு, அரிசி மாவு, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
இதை பஜ்ஜி மாவை விடக் கெட்டியான பதத்தில் பிசைய வேண்டும். பின்னர் பன்னீரை இந்தக் கலவையில் போட்டு, உடைந்துவிடாமல் பிரட்டவும். இப்போது அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலாவில் பிரட்டு எடுத்த பன்னீரை போட்டு பொரித்தெடுக்கவும்.
எண்ணெயை பொரிக்கும் பதத்திற்கு காய வைத்துப் போடவும். இல்லையென்றால் மசாலா பிரிந்து வந்து விடும். இப்படி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பன்னீர் ப்ரை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |