சுவைக்கு சுகமான செஃப் தாமுவின் பாகற்காய் இனிப்பு பச்சடி - ரெசிபி செய்ய ஆசையா?
பாகற்காய் ஒரு கசப்பான காய்கறியாகும். ஆனால் இதில் இனிப்பான ஒரு ரெசிபி செய்ய முடியும் என்றால் அது சமையல் புலி தாமுவால் தான் முடியும்.
ஆனால் இந்த ரெசிபி சக்கரை போல இனிக்காது. பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்று நோய் வருவதைத் தடுக்க முடியும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
இதனால் இதை பெண்கள் கட்டாயம் சாப்பிடலாம். ஆனால் இதன் கசப்பு தன்மை காரணமாக வெறுக்கும் மக்களுக்கு தான் இந்த பதிவில் பாகற்காய் இனிப்பு பச்சடி செய்யப்போகிறோம். இதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 250 கிராம் பாகற்காய் (நறுக்கியது)
- 2 வெங்காயம் (சிறியது, பொடியாக நறுக்கியது)
- 1/2 தேங்காய் (துருவியது)
- 1 1/2 தேக்கரண்டி
- எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
- சாம்பார் வெங்காயம் (சிறியதாக நறுக்கியது)
- 1 தக்காளி (பொடியாக நறுக்கியது)
- 1 பல் பூண்டு (நறுக்கியது)
- 1/3 கப் வெல்லம் ருசிக்கேற்ப
- உப்பு கடுகு விதைகள் (சிறிது)
- 1/2 முதல் 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் (நறுக்கியது)
- கொத்தமல்லி இலைகள் (கைப்பிடி, நறுக்கியது)
- மஞ்சள் தூள் (ஒரு சிட்டிகை)
- சிவப்பு மிளகாய் தூள் (சிறிதளவு)
- சீரகப் பொடி (சிறிதளவு)
- கரம் மசாலா பவுடர் (சிறிதளவு)
- கொத்தமல்லி தூள் (சிறிதளவு)
வழிமுறைகள்
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சூடாக்கவும். பின்னர் பாகற்காய்களை ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வதக்கி, எடுத்து தனியே வைக்கலாம்.
பாத்தரத்தில் மீதமுள்ள எண்ணையை சேர்க்கவும். பின்னர் கடுகு விதைகளை 10 வினாடிகள் வறுக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், சாம்பார் வெங்காயம், வெங்காயம், தக்காளி, பூண்டு, கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
2 முதல் 4 நிமிடங்கள் இவற்றை சமைக்கவும். இதன் பின்னர் இந்த கலக்கிய பொருட்களுடன் மசாலா பொடிகள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்க்கவும். ஒரு நிமிடம் கழித்து தனியே எடுத்து வைத்த பாகற்காய்களை சேர்க்கவும்.
பின்னர் 15 நிமிடங்கள் சமைத்து வெல்லம் சேர்க்கவும். இதனை அடிப்பகுதியில் ஒட்டாமல் இருக்க சில நிமிடங்கள் தொடர்ந்து கிளறவும். கடைசியாக தேங்காய் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
இதை இறக்கிய பின்னர் நன்றாக கலக்க வேண்டும். இந்த பச்சடியை இட்லி, தோசை அல்லது சாதத்துடன் பரிமாறினால் சிறப்பான பாராட்டு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |