சுவையான சீஸ் முறுக்கு சாண்ட்விச் 10 நிமிஷசத்துல செய்ய தெரியுமா?
பொதுவாக வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
இதனால் மாலை நேரங்களில் வீட்டிலுள்ள அம்மாக்கள் ஏதாவது செய்வார்கள்.
அந்த வகையில் மாலை நேர ஸ்நாக்ஸ்க்கு சீஸ் முறுக்கு சாண்ட்விச் ரெசிபி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
- முறுக்கு - தேவையான அளவு
- வெங்காயம் - 1
- வெள்ளரிக்காய் - 1
- தக்காளி - 1
- ஓமப்பொடி - 1 கப்
- சீஸ் துருவல் - 1 கப் சட்னி
தயாரிக்க தேவையான பொருட்கள்
- புதினா - ஒரு கைப்பிடி
- கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - சிறிய துண்டு
- பொட்டுக்கடலை - 3 டேபிள்
- ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
- எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் நாம் ஒரு மிக்ஸி சாரில் புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
பின்னர் வட்டமாகவும், தட்டையாகவும் முறுக்கை செய்து எடுத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை முறுக்கின் அளவிற்கு ஏற்ப வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
முறுக்கின் மேல், முதலில் சட்னியை சிறிதளவு தடவவும். பின்பு வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் ஓமப்பொடி ஆகியவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.
இந்த அடுக்கின் மீது சிறிதளவு சட்னியை வைத்து மற்றொரு முறுக்கைக் கொண்டு மூடவும்.
பிறகு அதன் மேற்பகுதியில் சீஸ் துருவலை தாராளமாகத் தூவவும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, 'சீஸ் முறுக்கு சாண்ட்விச்' தயார்.