தங்கத்தை காதலிக்கும் பெண்களே உஷார்! தங்கம் வாங்கும் முன்னர் இதை செக் பண்ணுங்க
'தண்ணீரை காதலிக்தாத மீன்களும் தங்கத்தை காதலிக்காத பெண்களும் பூமியில் கிடையாது' என்றே சொல்ல வேண்டும் அதிலும் குறிப்பாக தமிழ் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை.
தமிழ் பெண்களை பொருத்தவரையில் சேமிப்பு என்றாலே அது தங்கம் வாங்குவதுதான் என்ற நினைப்பு அவர்கள் மத்தியில் இருக்கும்.
பொதுவாகவே குடும்ப பெண்களின் வாழ்நாள் சேமிப்பு என்பது அவர்கள் வாங்கும் தங்கமாகத்ததான் இருக்கும் இப்படி நாம் தங்கத்தில் முதலீடு செய்யும் போது மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றது.
தங்கத்தின் விலை மாறுபடும்
தங்கம் வாங்கும் போது அது குறித்த போதிய விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம். தங்கம் வாங்க வேண்டும் என முடிவுசெய்தவுடன் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை என்ன? எனும் கேள்விக்கு உங்களிடம் விடை இருக்கின்றதா என முதலில் பார்த்துக்கொள்ளுங்கள்.
தங்கத்தின் தேவை, இறக்குமதி செலவுகள் மற்றும் பல்வேறு காரணிகளால் ஒவ்வொரு நாட்டிலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது.
போக்குவரத்து செலவு, கட்டணங்கள், வரிகள் மற்றும் அதை வாங்குவதில் உள்ள பிற கட்டணங்கள் என பல காரணிகள், ஒவ்வொரு ஊரிலும் அன்றைய தங்கத்தின் விலையை தீர்மானிக்கிறது.
உதாரணமாக, துறைமுக நகரங்களில் தங்கத்தின் விலை குறைவாக இருக்கும். ஒவ்வொரு நகரத்திலும் தங்கத்தின் விலை, காலை மற்றும் மாலை என ஒரு நாளைக்கு இரண்டு முறை புதுப்பிக்கப்படுகிறது.
ஆபரணங்களைத் தயாரிப்பதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான கூலியும் நகரத்துக்கு நகரம் வேறுபடும். தங்கம் வாங்குவதற்கு முந்தைய நாளின் தங்கத்தின் விலையை அறிந்து கொள்வது அவசியம்.
உங்களின் மகிழ்சியான சேமிப்பாக இருக்கும் தங்கத்தினை வாங்கும் முன்னர் நீங்கள் நன்றாக ஆராய்ந்து சரியான இடத்தை தெரிவு செய்தீர்களானால் உங்களின் அந்த சேமிப்பு எப்போதும் பயன் உள்ளதாக அமையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |