எகிறும் பெட்ரோல் விலை: ரூ.50,000ல் அசத்தலான Electric Scooter வாங்கலாம்
பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தினசரி அலுவலகம் சென்று வருபவர்கள் தாராளமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி பயன்படுத்தலாம்.
இந்த பதிவில் 50,000 ரூபாய்க்கும் கீழ் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Hero Electric Flash LX (VRLA)
சிவப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.46,640 ஆகும்.
250W பவருக்கும் குறைவான மோட்டார் மற்றும் 48V பேட்டரியைக் கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரானது அதிகபட்சமாக 25 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ஸ்கூட்டரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கி.மீவரை இயக்கலாம்.
மேலும் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 8 முதல் 10 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hero Electric Optima LX (VRLA)
வெள்ளை, நீலம் மற்றும் சாம்பல் வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.51,440 .
இந்த ஸ்கூட்டரை அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் மட்டுமே ஓட்ட முடியும், இது 250W பவருக்கும் குறைவான மோட்டார் மற்றும் 48V பேட்டரியைக் கொண்டுள்ளது.