திடீரென உயிரிழந்த புரட்சியாளர் சேகுவேராவின் மகன்!
கியூபாவின் புரட்சியாளர் சேகுவேராவின் மகன் கமிலோ சேகுவேரா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.
உலக அளவில் புரட்சிக்கும், தியாகத்திற்கும் உதாரணமாக திழந்தவர் தான் புரட்சியாளர் சேகுவேரா. இவர், மருத்துவர்⸴ அரசியல்வாதி⸴ இலக்கியவாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட போராளியாவார்.

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில், இளையவர் கமிலோ சேகுவேரா வெனிசுலாவின் கராகஸ் நகருக்குச் சென்றபோது, நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துள்ளார்.
கமிலோ குவேரா பொதுவாக விளம்பரத்தை விரும்பாதவர், அவர் சில சமயங்களில் தனது தந்தையை கௌரவிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.
அப்போதே சந்தைப்படுத்தல் போன்ற நிகழ்வுகளில் சே குவேராவின் படத்தைப் பயன்படுத்துவதைப் பகிரங்கமாக எதிர்த்தார்.
