மீன ராசியில் 4 கிரகங்கள்... உஷாராக இருக்க வேண்டிய 3 ராசிகள்
ஏப்ரல் மாதத்தில் நிகழும் சதுர்கிரக ராஜயோகத்தினால் அதிக பாதிப்பினை பெறும் 3 ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சதுர்கிரக ராஜயோகம்
ஜோதிடத்தில் கிரகங்களின் இடம் மாற்றம், சேர்க்கை இவைகள் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் குதுர்கிரக ராஜயோகம் மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகின்றது.
ஏப்ரல் மாதம் 11ம் தேதி புதன் கிரகம், மீன ராசிக்குள் நுழைகின்றது. ஏற்கனவே ராசியில் சூரியன், செவ்வாய், சனி இருப்பதால் புதனும் சேர்கின்றது.
இதனால் சதுர்கிரக ராஜயோகம் உருவாகும் நிலையில், மூன்று ராசியினருக்கு சிக்கல் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. அவை எந்தெந்த ராசியினர் என தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினர் சதுர்கிரக ராஜயோகத்தினால், சில சிக்கல் ஏற்படுவதுடன், மன அழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
வேலை மற்றும் குடும்பத்த்திற்கு இடையே சமநிலை பேணுவதில் கஷ்டம் ஏற்படுவதுடன், யோசிக்காமல் முதலீடு செய்வதை தவிர்க்கவும். ஏனெனில் பணத்தை இழக்கும் நிலை ஏற்படும்.
உடல்நல பிரச்சனைகள், தலைவலி, வயிறு சம்பந்தமான பிரச்சனையும் ஏற்படலாம். முடிவு எடுக்கும் முன்பு மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லதாகும்.

சிம்மம்
சிம்ம ராசியினர் இந்த கிரக சேர்க்கையினால் எதிர்பாராத பிரச்சனை சந்திப்பதுடன், திடீர் சவால்களையும் சந்திப்பார்கள்.
எதிரியிடமிருந்து கடுமையான அழுத்தம் ஏற்படும், வேலை மற்றும் வியாபாரத்தில் தடைகள் வரலாம். எந்த முடிவை எடுத்தாலும் பலமுறை யோசித்து எடுத்தால் தான் வெற்றி கிடைக்கும்.
தடையிலிருந்து தப்பிக்க நிவாரணம் பெறுவதற்கு மகா விஷ்ணுவை வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.

துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த யோகத்தினால் எதிர்பாராத சிக்கல் ஏற்படுவதுடன், நிதி ரீதியான பிரச்சனையை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த நேரத்தில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்கும் போதோ, முதலீடு செய்யும் போதோ மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம். யாரையும் நம்பி ஏமாந்திவிட வேண்டாம்.
பெற்றோரின் உடல்நலத்தில் அக்கறையுடன் இருக்கவும். துலாம் ராசியினர் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்வது மிகவும் நல்லதாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |