நவம்பர் 30-ல் உருவாகும் சதுர்கிரக யோகம்: அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்!
Chaturgraha Yoga on November 30 : ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவ கிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் தாக்கம் செலுத்தும் என்று நம்ப்படுகின்றது.
கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாறுவதுடன், மற்ற கிரகங்களுடன் இணைந்து பல்வேறு யோகங்களையும் உருவாக்குகின்றன.இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படும்.

அந்த வகையில், நவம்பர் 30 ஆம் தேதி சிம்ம ராசியில் ஒரு சிறப்புமிக்க சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.மனதின் காரகனாகக் கருதப்படும் சந்திரன் அன்றைய தினம் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். அங்கு ஏற்கனவே சஞ்சரிக்கும் குரு, செவ்வாய், கேது ஆகிய கிரகங்களுடன் இணைவதால் இந்த யோகம் உருவாகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை, தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சாதக நன்மைகள் கிடைக்கப்போகின்றது என கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி சதுர்கிரக யோகத்தின் தாக்கத்தால் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் 5ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
நிதி ரீதியாக எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். முதலீடுகள் எதிர்காலத்தில் லாபத்தைப் பெற்றுத் தரும். இருப்பினும், அவசர முடிவுகளைத் தவிர்த்து நன்கு யோசித்துச் செயல்படுவது சிறப்பு.
பணியிடத்தில் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைப்பதுடன், கடன் தொல்லைகளும் குறையும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகளும், பயணங்களால் நிதி ஆதாயங்களும் கிடைக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் தன்னம்பிக்கையும் தலைமைத்துவத் திறனும் அதிகரிக்கும்.
முக்கியப் பணிகளைச் செய்யும் வாய்ப்புகள் கிடைப்பதுடன், நிலுவையில் உள்ள வேலைகளும் வெற்றிகரமாக முடியும். பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
புதிய நட்புகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக அமையும். வருமானம் அதிகரிப்பதுடன், புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகளும் உருவாகும். ஒட்டுமொத்தமாக வாழ்க்கையில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
தனுசு

தனுசு ராசியின் 9ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் நீண்டகாலமாகத் தடைப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதுடன், கடின உழைப்புக்கான அங்கீகாரமும் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையலாம். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். வணிகர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அனுபவசாலிகளின் வழிகாட்டுதல் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |