ChatGPT-இல் புதிய அறிமுகம்... யார் யார் பயன் பெறலாம்? முழு விபரம் இதோ
இனி ChatGPT யூசர்களை கையில் பிடிக்க முடியாது போல! Google மற்றும் Microsoft நிறுவனங்களை பார்த்து "தம்பிகளா, ஓரமா போய் சண்டை போடுங்கப்பா!" என சொல்வது போல், OpenAI நிறுவனம் மிகப் பெரிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
என்ன மாற்றமா?
Google தனது Search-இல் AI Mode-ஐ, Microsoft தனது Edge browser-இல் Copilot Mode-ஐ சேர்த்த நிலையில், OpenAI நிறுவனமும் தனது ChatGPT பிளாட்பாரத்தில் புதிய "Study Mode" என்பதைக் கொண்டு வந்துள்ளது.
Study Mode-ன் சிறப்பம்சங்கள்
இது மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும்.
நேரடியாக பதில்கள் சொல்லாமல், மாணவரை சிந்திக்க வைக்கும் பாணியில் உதவுகிறது.
வீட்டு வேலை, தேர்வுக்கான தயாரிப்பு, புதிய தலைப்புகள் குறித்து கற்றுக்கொள்ள உதவும்.
Study Mode-ஐ தேர்வு செய்த பிறகு, ChatGPT பயனாளியின் கேள்விக்குப் பதிலளிக்காமல், அதற்கான தீர்வை அவரே சிந்தித்து காண முயற்சிக்க வைப்பது அதன் முக்கிய அம்சமாகும்.
எங்கிருந்து இதை பயன்படுத்தலாம்?
ChatGPT-யின் Tools மெனுவில், "Canvas", "Deep Research" உள்ளிட்டவைகளுடன் "Study and Learn" என்ற விருப்பத்தை தேர்வு செய்தால், Study Mode செயல்படும்.
இது Free, Plus, Pro, Teams என அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.
மேலும், விரைவில் ChatGPT Edu திட்டத்தில் இந்த அம்சம் அடங்க இருக்கிறது.
Study Mode எப்படி வேலை செய்கிறது?
இந்த அம்சம் ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், கல்வி நிபுணர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து உருவாக்கப்பட்ட Custom Instructions அடிப்படையில் இயங்குகிறது.
சாக்ரடிக் (Socratic) முறையில் கேள்வி எழுப்பி, பயனாளியின் அறிவை வளர்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தகவல்களைத் துணுக்குகளாக வகைப்படுத்தி, பயனரின் திறனைப் பொறுத்து படிப்புகளை வழங்கும்.
தேர்வுக்கு பயிற்சி அளிக்க வினாடி வினா, திறந்த கேள்விகள் உள்ளிட்டவை உள்ளடக்கியவை.
Study Mode-ஐ ஒரே கிளிக்கில் ஆன்/ஆஃப் செய்ய முடியும். ஆனால், இது பெற்றோர் கட்டுப்பாடு அல்லது கணக்கு பாதுகாப்பு அமைப்புகளுடன் வருவதில்லை. அதனால் மாணவர்கள் நேரடி பதில்கள் பெற Study Mode-ஐ விருப்பமின்றி மாறிக்கொள்ளலாம்.
ChatGPT 5 வெர்ஷன் எப்போது?
OpenAI நிறுவனம் தனது அடுத்த AI மாடல் ChatGPT-5-ஐ 2025 ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
Base
Nano
Mini
என மூன்று வகைகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. GPT-சீரிஸ் மற்றும் O-சீரிஸ் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைக்கும் வகையில், இது தனிப்பட்ட பகுத்தறிவு திறன் கொண்ட முழுமையான மாடலாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |