சப்பாத்திக்கு இப்படியொரு கிரேவி வைச்சி பாருங்க... அளவில்லாமல் சாப்பிடுவாங்களாம்
gravy
chapathi
butter beans
By Manchu
சப்பாத்தி என்றால் அதற்கான நாம் தொட்டுக்கொள்ள அதிகமாக விரும்புவது குருமா தான். அதிலும் வகைவகையாகவும், சற்று சுவையாகவும், வைத்தால் அதிகமான சப்பாத்தி சாப்பிட தோன்றும்.
சப்பாத்திக்கு பட்டர்பீன்ஸ் மசாலா மிகவும் எளிதாக எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்:
பட்டர்பீன்ஸ்: 500கிராம்
வெங்காயம்: 2
தக்காளி: 2
பச்சை மிளகாய்:2
இஞ்சி பூண்டு விழுது: 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்: 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள்: 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்: 1 டீஸ்பூன்
கரம் மசாலா: 1 டீஸ்பூன்
சீரகத்தூள்: 1 டீஸ்பூன்
தயிர்: 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை: சிறிது
புதினா: சிறிது
கஸூரி மேத்தி: சிறிது (தேவைப்பட்டால்)
செய்முறை:
- பட்டர்பீன்ஸை நன்றாக சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி கழுவி, குக்கரில் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அடிகனமான வானலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயவிழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பிறகு தக்காளி விழுதை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இஞ்சிபூண்டு விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரைவதக்கவும்.
- பின்னர் மிளகாய்த்தூள் தனியாத்தூள் மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இந்த மசாலா கலவையில் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
- வேகவைத்த பட்டர்பீன்ஸை மசாலாவில் கொட்டவும். தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- ஐந்துநிமிடத்திற்கு பிறகு சீரகத்தூள் மற்றும் கஸூரி மேத்தி சேர்த்து நன்றாக கலக்கவும்.
- இறுதியில் கொத்தமல்லி தழை மற்றும் புதினா இலை போட்டு இறக்கவும். பூரி சப்பாத்தி மற்றும் புலாவ் உடன் பரிமாறவும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US