ஆதாரில் உள்ள புகைப்படம் உங்களுக்கு பிடிக்கவில்லையா? சுலபமா நீங்களே மாற்றிடலாம்
old photo
aadhaar card
photo replace
By Manchu
ஆதார் அட்டை இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கி வருகின்றது. ஒரு நபரின் அனைத்து தகவல்களையும் இந்த எண்ணின் மூலம் தெரிந்துகொள்ளும் விதமாக இந்த அட்டை திகழ்கின்றது.
இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் அனைவருக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கிக்கணக்கு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, வேருமான வரித்துறை அட்டை என அனைத்தையும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆதாரில் பிறந்த திகதி, முகவரி, பெயர், மொபைல் எண் இவற்றில் மாற்றம் இருந்தால் இ சேவை மையங்களில் சென்று மாற்றி வருகின்றனர். அதே போன்று நீங்கள் ஆதாரில் உள்ள உங்களது பழைய புகைப்படத்தினையும் மாற்றம் செய்யலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரியவில்லை.
- முதலில் ஆதாரின் அதிகாரபூர்வ இணையதளமான https://uidai.gov.in/ தளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் ஆதார் அப்டேட் என்பதை கிளிக் செய்து book an appointment என்பதை தேர்வு செய்யவும்.
- மாநிலம், மாவட்டம், உங்களது முகவரி போன்றவற்றை உள்ளிடவும்.
- ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதற்கான அப்பாயின்மென்ட் தேதி, நேரம் ஆகியவற்றை குறிப்பிடவும்.
- மேற்கண்ட செயல்முறைகள் முடிந்த பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு அப்பாயின்மென்ட் எண் வரும்.
- அதை வைத்து கொண்டு அருகில் உள்ள என்ரோல்மென்ட் மையத்திற்கு சென்று உங்கள் புகைப்படத்தை மாற்றலாம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US