சந்திர கிரகணம் 2025: உலகின் பல நாடுகளில் மறைவு- இந்தியர்கள் மட்டும் அதிர்ஷ்டசாலிகள்
கடந்த சில தினங்களாக சந்திர கிரகண நாளில் நிலவு சிவப்பு நிறமாக காட்சிக் கொடுக்கப்போகிறது என்ற விடயம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
"இரத்த நிலவு" என அழைக்கப்படும் இந்த முழு சந்திர கிரகணமானது நாளைய தினம், செப்டம்பர் 7-8 தேதியில் நடக்கவுள்ளது.
பல நாட்களாக பேசப்பட்டு வரும் சந்திர கிரண நிகழ்வின் போது, பூமி சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் நேரடியாகச் சென்று, சந்திர மேற்பரப்பில் ஒரு நிழலைப் பரப்பி, சிவப்பு-ஆரஞ்சு நிற ஒளியில் காட்சிக் கொடுக்கவுள்ளது.
இந்த கிரணம், ஆசியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருப்பவர்களுக்கு முழுமையாக தெரியும். அதே சமயம், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருப்பவர்களுக்கு ஒரு பகுதியாக தெரியும்.
அந்த வகையில், இந்தியாவில் இருந்து பார்க்கும் பொழுது என்ன மாதிரியான வடிவம் தெரியும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் எங்கு பார்க்கலாம்?
வழக்கமாக சந்திர கிரகணம் என்றால் இரவு வானில் தெளிவாக பார்க்கலாம். வடக்கு மற்றும் தென் அமெரிக்கா பகுதிகளில் தெரிவதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
மாறாக உலகில் உள்ள கிட்டத்தட்ட 85% மக்கள் இதனை பார்க்க முடியும். இந்தியா எனக் கூறும் பொழுது எங்கிருந்தும் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக சில நகரங்களில் இருந்து பார்க்கும் பொழுது இன்னும் தெளிவாக தெரியும்.
இரத்த நிலவை நாம் மொட்டை மாடிகள், திறந்தவெளி வயல்கள் அல்லது நகர விளக்குகளில் இல்லாமல் இருக்கும் பூங்கா ஆகிய இடங்களில் இருந்து பார்க்கலாம். உயரமாக இருப்பதால் எங்கிருந்தும் பார்க்கலாம்.
- வட இந்தியா: டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், லக்னோ
- மேற்கு இந்தியா: மும்பை, அகமதாபாத், புனே
- தென் இந்தியா: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி
- கிழக்கு இந்தியா: கொல்கத்தா, புவனேஸ்வர், கௌஹாத்தி
- மத்திய இந்தியா: போபால், நாக்பூர், ராய்ப்பூர்
முழு சந்திர கிரகண நேரம்
முழு சந்திர கிரகணம் முழு நிலையில் சுமாராக 82 நிமிடங்கள் வரை இருக்கும். கடந்த ஆண்டு நீண்ட நேரம் சந்திர கிரணம் இருந்தது.
- ஆரம்பம்: இரவு 8:58PM (செப்டம்பர் 7)
- இரத்த நிலவு நிலை : இரவு 11:00 முதல் அதிகாலை 12:22
- முடிவு: அதிகாலை 2:25 (செப்டம்பர் 8)
இரத்த நிலவை எப்படி பார்க்கலாம்?
சூரிய கிரகணங்களை பார்க்கும் பொழுது ஏற்படும் கஷ்டங்கள் அல்லாமல் வெறும் கண்ணால் சந்திர கிரணத்தை பார்க்கலாம். சந்திரனில் உள்ள பள்ளங்கள் மற்றும் சிவப்பு சாய்வு போன்றவை கூட தொலைநோக்கியில் இருந்து பார்க்கும் பொழுது தெளிவாக தெரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |