சாணக்கிய நீதி : இந்த குணம் கொண்ட ஆண்களை தான் பெண்கள் அதிகம் விரும்புவார்கள்!
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.
இவர்களின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.

சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் பேர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் எந்த வகையான குணங்கள் கொண்ட ஆண்கள் பெண்களால் அதிகம் ஈர்க்கப்படுகின்றார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பெண்கள் விரும்பும் முக்கிய குணங்கள்
சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம், ஒரு ஆண் தன்னால் இயன்றவரை கடுமையாக உழைக்க குணத்தை கொண்டிருந்தால் அதனை பெண்கள் ரொம்பவும் மதிப்பதுடன் மிகவும் விரும்பவும் செய்வார்களாம்.
தன்னிடம் உள்ளதை கொண்டு மகிழ்ச்சியடையும் ஆண்களை தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது. தனக்குக் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டோ அல்லது உழைப்பின் பயனாகக் கிடைக்கும் பலனைக் கொண்டோ அவர் எப்போதும் மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் ஆசை.

சாணக்கியரின் கூற்றுப்படி, வாழ்வில் பெரிய சாதனையாளர்களா திகழ்வார்கள் தங்களின் தொழிலை காதலுடன் செய்தவர்கள் தான் என்கின்றார்.
சாணக்கியரின் கருத்துப்படி ஒரு நாய் எப்படி உறங்கிக்கொண்டிருக்கும் போதும் மிகுந்த விழிப்புணர்வுடன் திகழ்கிறதோ, அதேபோல ஆண்களும் தங்கள் கடமை விஷயத்தில் எப்போதும் விழிப்புணர்வுடனும் அக்கறையுடனும் இருக்க வேண்டும் என்கின்றார். காரணம் பொறுப்புணர்வுள்ள ஆண்களை தான் நல்ல பெண்கள் விரும்புகின்றார்கள் என்கின்றார்.

வாழ்க்கையில் நல்ல குணம் கொண்ட மனைவியை அடையவேண்டும் என்றால் அந்த ஆண் மிகுந்த பொறுப்புள்ளவனாக இருக்க வேண்டியது அவசியம்.
ஆச்சார்ய சாணக்கியரின் கருத்துப்படி நாயின் விசுவாசம் என்பது எல்லையில்லாதது. அதே போல, ஒரு ஆணும் தன் மனைவிக்கும், தனது வேலைக்கும் மிகுந்த விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்கின்றார்.

பணம் இல்லாத ஆண்களை கூட பெண்கள் விரும்புவார்கள். ஆனால் விசுவாசம் அற்ற ஆணை ஒரு நல்ல பெண் நிச்சயம் புறக்கணித்து விடுவாள் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
அறிமுகமில்லாத பெண்களைக் கண்டு பேராசை கொள்ளும் ஒரு ஆணின் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சிக்கு இடமே இல்லை என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
ஒரு நாய் தன் எஜமானுக்கு எப்படி விசுவாசியாக இருக்கின்றதோ அது போல் துணைக்கு விசுவாசமாக இருக்கும் ஆண்கள் தான் பெண்களால் விருப்படுகின்றார். இந்த குணங்கள் இருக்கும் ஆண்களால் தான் ஒரு நல்ல குணம் கொண்ட பெண்ணை மனைவியாக அடைய முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |