சாணக்கிய நீதி: இந்த 3 இடங்களில் செலவு செய்தால் உங்களிடம் செல்வம் குவிவது உறுதி!
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.
சாணக்கியரின் கொள்கைகைளையும் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது தான் சாணக்கிய நீதி நூல்.
இவரின் கருத்துக்களையும் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வில் வெற்றியடைந்தவர்கள் ஏராளம். தற்காலத்திலும் சாணக்கியரின் கருத்துக்களுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் உயர்ந்துக்கொண்டே தான் செல்கின்றது.
சாணக்கிய நீதியில் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவலின் பிரகாரம் குறிப்பிட்ட சில இடங்களில் பணத்தை செலவிடுவதால், பணம் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் எனவும் அதனால் வாழ்வில் செல்வம் குவிய ஆரம்பிக்கும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
மதச் சடங்குகள் மற்றும் விழாக்களில் தானம்
சாணக்கியரின் கருத்துப்படி மதச் சடங்குகள் மற்றும் விழாக்களின் போது செய்யப்படும் தானம் பெரும் சிறப்பு வாய்ந்தது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
அவ்வாறு மத நிகழ்வுகளில் தானம் செய்வதற்காக செலவிடப்படும் பணம் பல மடங்கு செல்வத்தை கொடுக்கும். இதனால் இறைவனின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும்.
தானம் செய்யும் மனப்பான்மை ஒருவரின் நிதி வளத்தை பெருக்க துணைப்புரிவதுடன்,மத நம்பிக்கையின்படி, நமக்குள் தெய்வீக ஆற்றல் பெருகவும் வழிகோலும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
சமூக நலனுக்காக செலவிடுதல்
சமூக நலன் கருதி செலவிடும் பணம் நிச்சயம் நல்ல கரும வினைகளை உருவாக்குகின்றது.அதன் விளைவாக நிச்சயம் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
நமக்கு கொடுத்த சமூகத்திற்கு மீண்டும் கொடுப்பது என்பது ஒரு தார்மீக கடமை மட்டுமல்ல, செல்வத்தைப் பெருக்கும் சிறந்த வழியாகவும் இருக்கும்
பாலங்கள், கிணறுகள் அல்லது கல்வி நிறுவனங்கள் போன்ற பொதுப் விடயங்களுக்காக செலவு செய்யும் பணம் மற்றவர்களின் ஆசீர்வாதம் மற்றும் வாழ்த்துக்கள் காரணமாக பல மடங்காக திருப்ப வரும் என குறிப்பிடப்படுகின்றது.
ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் தானம்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுவது ஒரு தார்மீக கடமை மட்டுமல்ல, இது இறைவனுக்கு செய்யும் நன்றிகடனாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
ஏழ்மையில் இருப்பவர்களுக்கு செய்யும் சிறிய பண உதவி கூட உங்கள் வாழ்க்கையை எதிர்பாராத அளவுக்கு உயர்த்தும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
ஏழை மக்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள் வாழ்வில் நிதி ரீதியி்ழ் உச்சத்தை அடைவதை யாராலும் தடுக்க முடியாது என குறிப்பிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
