இலட்சிய பாதையை ஆயத்தப்படுத்தும் சாணக்கிய நீதி- அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், சாணக்கிய நீதியில் இலட்சியத்தை இலகுவில் அடைய சாணக்கியர் சில அறிவுரைகளை கூறியுள்ளார். இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாணக்கிய நீதி
1. சாணக்கிய நீதியின்படி, வேலைகளை அந்த நேரத்தில் முடிக்க வேண்டும். சரியான நேரத்தில் வேலைகளை செய்து முடிப்பதால் இலகுவாக வெற்றியடையலாம்.
சோம்பலை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வெற்றியின் படிக்கட்டுகளில் அவசரப்படாமல் ஒவ்வொன்றாக ஏறலாம். அதற்கான நேரத்தை ஆயத்தப்படுத்துவது அவசியம்.
2. மாணவர்களின் வாழ்க்கையில் ஒழுக்கம் மிக முக்கியம். மாணவர்கள் வெற்றிப் பெற வேண்டும் என்றால் முதலில் ஒழுக்கத்தை சரியாக கற்றுக் கொள்ள வேண்டும். உயர்ந்த நிலையில் இருப்பதற்கான ஆரம்ப தகுதி ஒழுக்கம் என சாணக்கியர் கூறுகிறார்.
3. மாணவர்கள் எப்போதும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். உங்கள் நண்பர் ஒழுக்கம் தவறி நடந்தால் அவரிடம் இருந்து விலகி நிற்பது நல்லது. தவறான தொடர்பு உங்களின் ஒழுக்கத்தையும், நற்பெயரையும் அழித்து விடக்கூடும். நல்ல நண்பர்களை அருகாமையில் வைத்து கொள்ளுங்கள்.
4. சாணக்கியரின் கூற்றுப்படி, மாணவர்கள் போதைப்பொருள் பாவணையை முற்றாக தவிர்க்க வேண்டும். போதைப்பழக்கம் உடல், மனம் மற்றும் செல்வத்தை அழிக்கும். இவற்றை தாண்டி சமூகம் மற்றும் குடும்பத்தில் உங்கள் மரியாதை குறையும். இந்த பழக்கம் உங்கள் இலட்சியத்தை கூட பாதிக்கலாம்.
5. சோம்பேறித்தனம் வெற்றிக்கு மிகப்பெரிய எதிரியாக பார்க்கப்படுகின்றது. இலக்கை நோக்கி ஓடும் பொழுது சோம்பல் இருக்கவே கூடாது. கடின உழைப்பு உங்களிடம் இருக்கும் சோம்பலை விரட்டியடிக்கும். வாழ்க்கையில் உங்களுக்கான அடையாளத்தை உருவாக்க நீங்கள் தான் முதலில் முயற்சி செய்ய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |