Chanakya Niti: மனநிம்மதியுடன் வாழணுமா? இந்த 5 வகை நபர்களிடமிருந்து விலகியே இருங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவரே ஆச்சார்யா சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி எனும் வேத நூல் ஆகும்.
இன்றளவும் உலகளவில் ஆயிரங்கணக்கானவர்கள் சாணக்கிய நீதியை பின்பற்றுகின்றார்கள்.இதனை பின்பற்றிய பலரும் வாழ்வில் வெற்றியடைந்தமைக்கான சான்றுகளும் இருக்கின்றன.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் வாழ்வில் நிம்மதியாகவும் மனநிறைவுடனும் வாழ வேண்டும் என்றால் குறிப்பிட்ட சில தீய குணங்கள் கொண்ட நபர்களை உங்கள் வாழ்வில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என குறிப்பிடப்டுகின்றது.
அந்தவகையில் எத்தகைய குணம் கொண்ட மனிதர்களை வாழ்வில் இருந்து எப்போதும் ஒதுக்கி வைக்க வேண்டும் என இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
விலகியிருக்க வேண்டிய நபர்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம் நாம் நண்பர்களை தெரிவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் வேண்டும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார். சுயநல குணமுடையவர்களுடன் ஒருபோதும் நட்பு வைத்துக்ககொள்ள கூடாது.
இப்படிப்பட்டவர்கள் உங்களை தங்களின் தேவைக்காக பயன்படுத்திவிட்டு விலகிவிடுவார்கள். இவர்களுடன் நட்பு வைத்துக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் சோகத்தில் இருக்க வேண்டிய நிலை உருவாகும். எனவே சுயநலம் கொண்டவர்களிடமிருந்து எப்போதும் விலகியிருப்பதே சிறந்தது.
சாணக்கியரின் கருத்துப்படி ஒருவருடைய பதவி, மற்றும் செல்வத்தைப் பார்த்து பழகுபவர்களை ஒருபோதும் நம்டபக்கூடாது. உங்களிடம் பணமும் பதவியும் இல்லாமல் போனால் அவர்கள் உங்களிடமிருந்து குளம் வற்றியதும் கொக்கு பறப்பது போது போய்விடுவார்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகி இருப்பதே நல்லது.
சாணக்கியரின் கூற்றுப்படி, உங்களின் கடினமாக நேரங்களில் தனியாக விட்டு சென்றுவிட்டு பின்னர் அந்த சூழ்நிலையில் இருந்து உங்களின் முயற்ச்சியால் நீங்கள் மீண்டுவந்த பின்னர் உங்களின் உறவை புதுபிக்க நினைப்பவர்களை ஒருபோதும் அருகில் வைத்துக்கொள்ளாதீர்கள். இவர்கள் உங்கள் நிம்மதியை மொத்தமாக சூரையாடி விடுவார்கள்.
சாணக்கியரின் கருத்துப்படி தங்களின் மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாடும் குணம் கொண்டவர்களுடன் ஒரு போதும் நட்புக்கொள்ளாதீர்கள். இப்படிப்பட்டவர்கள் உங்களின் மகிழ்ச்சிக்கு
முகத்திற்கு நேராக இனிமையாகப் பேசிவிட்டு பின்னால் இருந்து உங்களுக்கு எதிராக செயல்படுபவர்களுடன் ஒருபோதும் நட்பு கொள்ளாதீர்கள்.
அத்தகைய நண்பர்கள் நஞ்சு நிறைந்த பானை போன்றது. வெளியில் இனிமையாகவும் உள்ளத்தில் தீயவனாகவும் இருப்பவரை நண்பன் என்று சொல்ல முடியாது. அத்தகைய நண்பர் உங்கள் தனிப்பட்ட மற்றும் சமூக நற்பெயரைக் கெடுப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |