இனி அப்பாவியாக இருக்காதே, அடிமையாக்கப்படுவாய்! சாணக்கியர் எச்சரிக்கை
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் குறிப்பிட்ட விடயங்களில் அதிகமான கவனம் எடுத்து கொள்ள வேண்டும். சாணக்கியர் கூற்றின்படி, ஒருவர் என்னென்ன விடயங்களை இழக்கக் கூடாது என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

சாணக்கியரின் தத்துவங்கள்
1. உங்களுடைய பலவீனங்களை மறந்தும் யாரிடமும் கூறாதீர்கள். ஏனெனின் உங்களுடைய பலவீனம் மற்றவர்களுக்கு தெரிந்தால், அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி உங்களை முறியடித்து விடுவார்கள்.
2. சரியான நேரத்தில் சரியான விடயங்களை பேசுவது நல்ல பண்பு. இது தெரியாவிட்டால் மற்றவர்கள் முன்னிலையில் நீங்கள் மதிக்கப்பட்டமாட்டீர்கள். நேரத்திற்கு ஏற்றப்படி பேசாவிட்டால் நீங்கள் கேலி, கிண்டல் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

3. சுயமரியாதை அவசியம் என நீங்களே முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்காவிட்டால் மற்றவர்கள் உங்களை குப்பை போன்று நடத்துவார்கள். முடிந்தவரை நீங்கள் உங்களை மரியாதை செய்யுங்கள்.
4. உங்கள் முன் எதிர்மறையான கருத்துக்களை முன் வைக்கும் பொழுது அதற்கு யோசித்து பதில் கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள். கோபத்தினால் எதுவும் செய்து விட முடியாது. சிலர் உங்களின் கோபத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

5. நண்பர்கள் எனக் கூறப்படுபவர்கள் எந்த நோக்கமும் இல்லாமல் உங்களுடன் இருக்கமாட்டார்கள். முதலில் அவர்களின் நோக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு வரவிருக்கும் ஆபத்தில் இருந்து உங்களை காத்துக் கொள்ளும். நண்பர்களாக இருந்தாலும் சரி, உறவுகளாக இருந்தாலும் அவர்கள் உங்களை தேடிவதில் நோக்கம் இருக்கிறது.
6. நீங்கள் யாராக இருந்தாலும் பொறுமை அவசியம். என்ன தான் நீங்கள் உயரத்திற்கு சென்றிருந்தாலும் பொறுமையாக இல்லாவிட்டால் வீழ்ச்சி நிச்சயம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |