முதுகில் குத்தும் நபர்கள்: சாணக்கியர் கொடுத்த டிப்ஸ்
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், சாணக்கிய நீதியில் கூறப்பட்டது போன்று குறிப்பிட்ட சிலரை வாழ்க்கையில் வைத்துக் கொள்ளவே கூடாது எனக் கூறப்படுகிறது. அப்படியானவர்கள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. உங்கள் மீது அடிக்கடி விமர்சனங்களை முன் வைப்பவர்கள் உடன் வைத்து கொள்ள வேண்டாம் என சாணக்கியர் எச்சரிக்கிறார். ஏனெனின், இவர்கள் உங்களின் நம்பிக்கையை உடைத்து விடுவார்கள். இவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
2. நல்ல நேரத்தில் மட்டும் உடன் இருப்பவர்கள், ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் காணாமல் போய் விடுவார்கள். இன்னும் சிலர் நாம் கஷ்டத்தில் இருப்பவர்கள் உடன் இருந்து மகிழ்பவர்கள், சந்தோஷமாக இருக்கும் சமயத்தில் காணாமல் போய் விடுவார்கள். உண்மையான நண்பர்களை உடன் வைத்துக் கொள்வதே சிறந்தது.

3. யாராவது உங்கள் முன் மற்றவர்களின் குறைகளை பேசினால் அவர்கள் உங்களையும் மற்றவர்களிடம் அப்படி தான் பேசுவார்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
4. எப்போதும் இனிமையான பேசுகிறார்கள் என்றால் அவர்களிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது என சாணக்கியர் கூறுகிறார். எப்போதும் புகழ்ச்சியுடன் வாழ்வது கடினம். இவர்கள் சுயநலவாதியாக இருப்பார்கள்.

5. முதல் தடவையில் ஒருவரின் குணங்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களை வைக்கும் இடத்தில் வைப்பதே சிறந்தது. யாராவது உங்களிடம் அதிகமாக அன்பு காட்டுகிறார்கள் என்றால் அவர்கள் தான் நாளை உங்களை கஷ்டப்படுத்துவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |