சாணக்கிய நீதி - வீட்டில் கெட்ட காலம் வரும் அறிகுறி... ஜாக்கிதை
ஆச்சார்ய சாணக்கியர் வீட்டில் கெட்ட காலம் தொடங்குவதற்கு முன்னர் என்னென்ன அறிகுறிகள் காட்டும் என்பதை பதிவில் கூறப்பட்டுள்ளது.
சாணக்கியர் நீதி
ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.
இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நீதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. பலரும் இந்த விடயங்களை பின்பற்றி வாழ்க்கையில் பயன்பெற்று உள்ளனர்.
அந்த வகையில் வீட்டில் கெட்ட காலம் ஆரம்பிக்க போகிறது என்றால் அதற்கு முன்னர் சில அறிகுறிகள் காட்டும் என சாணக்கியர் கூறுகிறார். இதை மக்கள் தெரிந்து கொள்வது அவசியம். அது என்னவென்று பதிவில் பார்க்கலாம்.

கெட்ட கால அறிகுறிகள்
- துளசி செடி - வீட்டில் துளசிச்செடி வைக்கபடுவதற்கு பல காரணங்கள் உள்ளது. சாணக்கியர் கூற்றுப்படி இந்த துளசிச்செடி வாடினால் வீட்டில் பொருளாதார பிரச்சனை வரப்போகின்றது என கூறப்படுகின்றது. இது ஒரு கெட்ட கால அறிகுறி.
- முடிவில்லா சண்டை - ஒரு வீட்டில் எடுதற்றெல்லாம் எப்போதும் சண்டை சச்சரவுகள் நடந்துகொண்டே இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி தேவி இருக்க மாட்டாராம். இதன் காரணமாக நிதி இழப்பு குடும்பத்தில் ஏற்படும் என சாணக்கியர் கூறுகிறார்.
- திடீரென கண்ணாடி உடைதல் - வீட்டில் இருக்கும் கண்ணாடி திடீரென யாரின் கை தவறியோ அல்லது கீழே விழுந்து உடைந்தாலோ வீட்டில் இருக்கும் யாருக்கோ பிரச்சனை வரப்போகின்றது என கூறப்படுகின்றது.
- கடவுள் வழிபாடு இல்லாத வீடு - கடவுளுக்கு தினமும் நாம் பூஜை செய்வது அவசியம். அப்படி நாம் பூஜை செய்வது வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வரும். வீட்டில் பூஜை செய்தால் சீதேவி வரும் என கூறப்படுகின்றது.
- பெரியோருக்கு பணியாமை - சாணக்கியர் கூறியுள்ளார் நமது பெரியவர்களை மதிக்கவில்லை என்றால் அந்த இடத்தில் லட்சுமி தேவி இருக்க மாட்டார் என்று கூறப்படுகின்றது. இதுபொன்ற விடயங்களை நாம் விட்டில் கண்டால் செய்தால் வீட்டிற்கு கெட்டகாலம் ஆரம்பம் என கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |