Chanakya: குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் பெற்றோர்களின் தீயச் செயல்கள்- இனி செய்யாதீங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் சில விஷயங்களைச் செய்யக்கூடாது என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
அந்த வகையில், இந்த 5 விஷயங்களை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் செய்யக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. குழந்தைகள் கடவுளைப் போன்றவர்கள். அவர்கள் முன் எக்காரணம் கொண்டு தவறான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. அவர்களுக்கு 5 வயது வரும் அன்பாகவே பழக வேண்டும். அவர்கள் செய்யும் தவறுகளை கூட அன்பால் நிறுத்த வேண்டும். ஏனெனின் அவர்களுக்கு எது சரி,தவறு என்று கூட தெரியாது.
2. ஒரு குழந்தை ஐந்து வயதை அடையும் முன்னர் அவர்கள் முன் பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் தாழ்த்தி பேசாதீர்கள். மற்றவர்களின் குறை நிறைகள் பற்றி பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார்.இப்படி செய்து வந்தால் குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வரலாம்.
3. சாணக்கிய நீதியின் படி, பெற்றோர்கள் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் மற்றும் ஒருவரையொருவர் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். குழந்தை இவற்றையெல்லாம் அவதானிப்பார்கள். குழந்தைகள் முன் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவோ, தவறான வார்த்தைகளையோ பயன்படுத்தக்கூடாது. இது பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்.
4. குழந்தைகள் முன் பொய் பேசுவதை தவிர்க்க வேண்டும். பொய் சொல்லும் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அன்பால் கண்டிக்க வேண்டும். சில சமயங்களில் சுயநலமாக குழந்தைகள் நடந்து கொள்வார்கள். அது தவறு என்பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
5. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன் எந்த ஒரு கெட்ட காரியத்தையும் செய்யக்கூடாது என சாணக்கியர் கூறுகிறார். இப்படி செய்வதால் குழந்தைகளிடம் கெட்ட பழக்கங்களும் உருவாகும். இதைப் பார்த்து அவர்களும் பழகிக் கொள்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |