Chanakya: இவர்களை நம்புங்க.. வாழ்க்கை நன்றாக இருக்கும் ஆண்களே!
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கிய கூற்றுப்படி, மரணத்திற்குப் பிறகு ஒருவர் சொர்க்கத்திற்குச் செல்வதா அல்லது நரகத்திற்குச் செல்வதா என்பதனை அவர்கள் செய்யும் செயல்களே தீர்மானிக்கின்றன.
அந்த வகையில் வாழ்க்கை துவங்க இருக்கும் ஆண்கள் என்ன மாதிரியான பெண்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதற்காக சாணக்கியர் கொடுத்த அறிவுரைகளில் சிலவற்றை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியர் அறிவுரை
1. தெரிவில் கவனம்
சாணக்கிய நீதியில் கூறப்பட்டதை போன்று பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஏனெனின் அமைதியான பெண்களுக்கு கோபம் பெரிதாக வராது. மாறாக அவளது புன்னகை குடும்ப வாழ்க்கைக்கு அவசியம்.
2. தர்மம்
தர்ம வழியில் நடக்கும் பெண்ணை திருமணம் செய்வது நல்லது என சாணக்கியர் வலியுறுத்துகிறார். வீட்டில் பூஜை வழிபாடுகள் அவசியம். அதனால் பெண்கள் எப்போதும் தெய்வீகமாக உணரச் செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
3. போதுமான அளவு புத்திசாலித்தனம்
பெண்களுக்கு அதிகமான அறிவு இருந்தாலும் அது பிரச்சினையை உண்டு பண்ணும். அதனால் ஒரு வீட்டை மகிழ்ச்சியாக பார்த்து கொள்ளும் அளவுக்கு புத்திசாலித்தனம் இருந்தால் நல்லது என சாணக்கியர் கூறுகிறார்.
4. நல்ல மனம்
சாணக்கிய நீதியின்படி, எப்போதும் இனிமையாக பேசும் குணம் கொண்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் பாக்கியவான்களாக இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள்.
5. மதிப்பு கொடுக்கும் குணம்
சில பெண்கள் யாரையும் பெரிதாக மதிக்கமாட்டார்கள். அனைவரையும் மதித்து நடக்கும் பெண்கள் வீட்டில் எப்படியான பிரச்சினை வந்தாலும் அதனை சரியாக சமாளிப்பார்கள். எங்கும் அமைதி மற்றும் நிம்மதி இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |