வாழ்நாள் முழுவதும் சந்தோசம் இல்லாமல் வாழப்போகும் நபர்கள்.. சாணக்கிய நீதி
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், சாணக்கிய நீதியில் ஒருவர் என்னென்ன பழக்கங்களை கைவிட்டால் வாழ்க்கையில் முன்னேறுவார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சந்தோஷம் இல்லாமல் வாழும் நபர்களின் குணம்
1. சாணக்கிய நீதியின் படி ஒருவர் தகுதிக்கு மீறி செலவுச் செய்யக் கூடாது. இதை மீறி செலவு செய்யும் பொழுது குடும்ப வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் வரும். அளவிற்கு அதிகமான பணத்தை சேமிக்க நினைப்பது தவறு. பணம் இல்லாதவர்கள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ முடியாது.
2. உங்கள் பலவீனத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என சாணக்கியர் கூறுகிறார். கவலையில் தன்னுடைய நண்பர்களிடம் எல்லா விடயங்களையும் கூறி விடுவோம். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அது நமக்கே பிரச்சினையாக வரும். நண்பர்களாக இருந்தாலும் ஒரு எல்லை வைத்து கொள்வது நல்லது.
3. பாகுபாடு காட்டுபவர் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். எந்த விஷயத்திலும் திருப்தியடைய மாட்டார்கள். வாழ்க்கையில் எப்போதும் அளவிற்கு அதிகமாக ஆசைப்படக் கூடாது.
4. சோம்பேறித்தனம் வாழ்க்கையில் வெற்றியை தள்ளி வைக்கும். தனது வேலைகளை தானே செய்து கொள்ள பழக வேண்டும். சோம்பேறியாக இருந்தால் வாழ்க்கை பல சந்தோசங்களை இழந்து விடுவீர்கள். வாழ்க்கையில் வெற்றியை அனுபவிக்க ஒருவர் செய்ய முதல் விடயம் இது தான்.
5. சந்தோசமாக வாழ பொறுமை மிக அவசியம். பொறுமையாக இருப்பவர்கள் எப்படியான பிரச்சினைகள் வந்தாலும் சமாளித்து விடுவார்கள். எனவே ஒரு நபர் எப்போதும் தனது நிகழ்காலத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்.
6. வாழ்க்கையின் துன்பமான காலகட்டங்களில் பணம் ஒருவரை பாதுகாக்கும். ஆனால் பணம் தான் வாழ்க்கை என்றால் அது தவறான கருத்து. சம்பாதிக்கும் பணத்தை சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கடினமான காலகட்டத்தை எளிதில் சமாளிப்பார்கள் என சாணக்கியர் கூறுகிறார்.
7. சாணக்கிய நீதியின் படி, பாதகமான சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை யோசிக்கும் திறன் அனைவருக்கும் இருக்க வேண்டும். அவசரத்தில் பேசுபவர்கள் அல்லது முடிவு எடுப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது கடினம். மனக்கிளர்ச்சியுடன் ஒரு முடிவு எடுக்கும் பொழுது அது உங்கள் வாழ்க்கையே மாற்றும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |