சாணக்கிய நீதி - உங்கள் வாழ்க்கையில் இவை இருந்தால் நீங்கள் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள்
குறிப்பிட்ட மூன்று விஷயங்கள் மனிதனது வாழ்வில் இருந்தால் அவன் பூவுலகில் சொர்க்கத்தில் வாழ்கிறான் என சாணக்கிய நீதி கூறுகின்றது.

சாணக்கிய நீதி
ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.
இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நீதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் சாணக்கியர் பூவுலகில் வாழும் மனிதனது வாழ்க்கையில் அவனுக்கு குறிப்பிட்ட சில விஷயங்கள் இருந்தால் அவர் பூமியிலேயே சொர்க்கத்தில் வாழ்கின்றான் எனப்படுகின்றது.

சாணக்கிய நீதி
கட்டுப்பாடான பிள்ளைகள்
- தனக்கு கட்டுப்படும் பிள்ளளைகள். அதாவது அவர்கள் பெற்ற குழந்தைகள் அவர்களுக்கு கீழ்படிந்து இருப்பது மட்டுமல்லாமல் புத்திசாலித்தனமாகவும் பெற்றோருக்கு பெருமை தேடி கொடுக்கும் பிள்ளளைகள் கிடைத்திருக்கும் நபர் உண்மையில் அதிர்ஷ்டசாலி எனப்படுகின்றது. இதுவே குடும்பத்தில் சமநிலையையும் அமைதியையும் உருவாக்குகிறது.
கணவன் மனைவி ஒத்துழைப்பு
- சாணக்கிய நீதியில் உள்ள மற்றொரு முக்கிய நற்பண்பு, வாழ்க்கைத் துணைக்கு ஆதரவளிப்பதாகும். மனைவியோ அல்லது கணவனோ தங்கள் வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை மதித்து, மத மற்றும் கலாச்சார நெறிகளுக்கு ஏற்ப செயல்பட்டால், குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். இந்த ஆதரவு திருமண உறவுகளுக்கு மட்டும் உரியதல்ல அனைத்து குடும்ப உறவுகளுக்கும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருகிறது.
செல்வம் மற்றும் சொத்து
- மூன்றாவது நற்பண்பு, செல்வத்திற்கு ஒருபோதும் பற்றாக்குறை இல்லாமல் இருப்பது. முயற்சி மற்றும் நேர்மையின் மூலம் செழிப்பாக இருப்பவர், சொர்க்கத்திற்கு இணையான மகிழ்ச்சியையும் மரியாதையையும் பெறுகிறார் என்று சாணக்கியர் கூறுகிறார். செல்வத்தை முறையாகப் பயன்படுத்துவதும், சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமாகப் பங்களிப்பதும் ஒருவரை ஆன்மீக ரீதியாகவும் பொருள் ரீதியாகவும் செழிப்பாக்குகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).