அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்யக்கூடாது ஏன்? சாணக்ய நீதியின் கருத்து
சாணக்கிய நீதியின் படி, கணவன் மனைவி இடையே அதிகமான வயது வித்தியாசம் இருக்கக்கூடாது என்று கூறுவதற்கான காரணத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
அதிக வயது வித்தியாசம்
சாணக்ய நீதியின் படி, கணவன் மனைவி உறவு மிகவும் புனிதமானது மட்டுமின்றி, ஒருவர் மற்றவரின் தேவைகளை கவனித்துக்கொண்டு வாழ்ந்தால் தான் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
உடல் மற்றும் மன ஆரோக்கியம் கணவன் மனைவி உறவிற்கு முக்கியமாக இருக்கின்றது. பெரியதாக வயது வித்தியாசம் காணப்பட்டால் அவை பிரச்சினையாக அமையும்.
முதிர் வயதாக இருக்கும் ஒருவர் இளம்பெண்ணை திருமணம் செய்யக்கூடாது. அவ்வாறு திருமணம் செய்தாலும் நீண்ட காலம் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாது.
மேலும் பெரிய வது வித்தியாசம் என்பது வேதனையை ஏற்படுத்துவதுடன், இருவரின் பிரிவிற்கு காரணமாக அமைகின்றது.
பொதுவாக கணவன் மனைவி இடையே 3 அல்லது 5 ஆண்டுகள் மட்டுமே இடைவெளி இருக்க வேண்டும். ஏனெனில் ஒருவரின் தேவைகளை மற்றவர் கவனித்துக்கொள்ளவது இந்த இடைவெளி இருந்தால் தான் சரியாக இருக்குமாம்.
ஒரே மாதிரியான மனநிலையுடனும், ஒருவரையொருவர் புரிந்து கொள்வதிலும் அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் சிக்கல் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |