சாணக்கியர் நீதி : இந்த 4 பேரிடம் ஒருபோதும் வாக்குவாதம் செய்யாதீங்க... வாழ்கை பாழாகிவிடும்
மனிதர்கள் ஏனைய உயிரினங்களிடமிருந்து வேறுப்படுவதற்கு காரணம் பகுத்தறிவு கொண்ட உயிரினம் என்பதால் தான்.
நம் எண்ணங்கள் தெளிவாக இருக்கும் பட்சத்தில் நம்மிடமிருந்த வெளிப்படும் வார்த்தைகள் நல்லவையாக தான் இருக்கும். சிந்தனை மற்றும் வார்த்தை சிறச்ததாக இருக்கும் மனிதனின் செயல் நிச்சயம் நல்லதாக தான் இருக்கும்.
அந்த வகையில் மனிதனின் எண்ணங்களை நெறிப்படுத்தும் சாணக்கிய நீதியினை பின்பற்றி வாழ்வோரின் எதிர்காலம் ஒளிமயமானதாகவே இருக்கும்.
சாணக்கியர் நீதியின் அடிப்படையில் எதிர்காலம் சிறப்பான இருக்கவும் வாழ்க்கையில் முன்னேறவும் நான்கு பேருடன் ஒருபோதும் வாக்குவாதம் செய்யவோ சண்டையிடவோ கூடாது என சொல்லப்படுகின்றது.அவர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
குடும்ப உறுப்பினர்கள்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை போடும் யாரும் நிம்மதியான வாழ்வை வாழவே முடியாது என எச்சரிக்கின்றார். நாம் கஷ்டத்தில் இருக்கும் போது உண்மையில் உதவி செய்பவர்கள் இவர்கள் தான். எனவே இவர்களுடன் வாக்குவாதம் செய்வது நம்முடைய வாழ்வையே அழித்துவிடும் சக்திபடைத்தது.
முட்டாள்கள்
ஒருவர் தான் நினைத்த அனைத்தும் சரி என நினைத்து வாழ்ந்துக்கொண்டிருந்தால் அதற்கு அவரின் அறிவின்மையே காரணம். சிலர் குடும்பமே அவரின் செயலால் பாதிக்கப்படுகின்ற போதும் கூட தான் செய்யும் செயலில் இருக்கும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர் முட்டாள். முட்டாள்களுடன் ஒருபோதும் வாக்குவாதம் செய்யக்கூடாது. இது நேரத்தை வீணடிக்கும் செயலாகும். அதனால் நம்முடைய அழகான வாழ்க்கை தான் பாதிக்கப்படும்.
நண்பர்கள்
வாழ்வில் இன்பத்திலும் துன்பத்திலும் கூடவே இருப்பவர்கள் தான் உண்மையான நண்பர்கள். அவர்களிடம் ஒருபோதும் வாக்குவாதம் செய்யவே கூடாது. சண்டையிட்டு ஒரு நண்பனை இழப்பது வாழ்வில் பாரிய இழப்பாகும். இது நம்முடைய இயல்பு நிலையையும் எதிர்காலத்தையும் வலுவாக பாதிக்கும்.
குரு
அனைவரின் வாழ்விலும் குரு முக்கிய பங்கு வகிக்கின்றார். குருவிற்கு பின்னர் தான் தெய்வததையே மதிக்க வேண்டும்.நம்முடைய அறிவை மேம்படுத்த துணைநிற்பவர் தான் குரு. அறியாமை எனும் இருளை அகற்றி வாழ்க்கையில் தெளிவை கொடுக்கும் குருவிடம் ஒரு போதும் வாக்குவாதம் செய்யவே கூடாது. இது வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஒருபோதும் கொடுக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |