இட்லி, தோசை, சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ்... வித்தியாசமாக செய்யலாம் சென்னா மசாலா
பொதுவாகவே வீடுகளில் இட்லி, தோசை, சப்பாத்தி தான் காலையில் அல்லது இரவில் சாப்பாடாக இருக்கும். இந்த உணவின் சுவையை அதிகரிப்பதற்கும் தொட்டுக் கொள்வதற்கும் சட்னி அல்லது சாம்பார் செய்வார்கள் ஆனால் அதற்கு பதிலாக சூப்பரான மசாலா செய்து சுவைக்கலாம்.
அந்தவகையில் தற்போது சுவையான சென்ன மசாலா எப்படி செய்வதென்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொண்டைக் கடலை – 200 கிராம்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி -பூண்டு விழுது
வெங்காயம் – 2
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
தக்காளி – 2
பட்டை – 1
ஏலக்காய் -2
கிராம்பு – சிறிதளவு
பச்சைமிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 5 விசில் வைத்து அவித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்சியில் தக்காளி பழத்தை அரைத்து கொள்ள வேண்டும். பிறகு தேங்காய், பச்சைமிளகாய், முத்திரி பருப்பு சேர்த்து நீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அவித்து வைத்த கொண்டைக்கடலையில் கொஞ்சமாக எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பெரிய வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயம் வதங்கிய பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கூடவே மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் என்பவற்றையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பச்சை வாசனை நீங்கியதும் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.
பின்பு ஏற்கனவே அரைத்து வைத்த தேங்காய், முந்திரிப்பருப்பு, பச்சைமிளகாய் பேஸ்டை அதில் சேர்த்து கலந்துவிடவும்.
அடுத்து பேஸ்டாக அரைத்த தக்காளி பழத்தையும் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
ஐந்து நிமிடம் மூடி வைத்து கொதிக்க வைக்கவும். பின்பு அரைத்த கொண்டைக் கடலையையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து மீதமுள்ள கொண்டை கடலையையும் சேர்த்து கலந்துவிடவும். இறுதியாக கொத்தமல்லி இலையை தூவி கலந்து இறக்கினால் ருசியான சென்னா மசாலா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |