தங்கம் விலை படிப்படியாக குறையும்- தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர்
பொதுவாக தங்க நகைகளை அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.
சமீப காலமாக, தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கின்ற நிலையில், நகை வாங்க முடியாத சிரமத்தில் பல பேர் இருக்கின்றனர்.
இந்நிலையில், தங்க நகை குறித்து ஜெயந்திலால் சலானி பல விடயங்களை இக்காணொளி மூலம் பகிர்ந்துள்ளார்.
இவர், ஒரு முக்கிய தங்க நகை வியாபாரி, தொழிலதிபர் மற்றும் சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஆவார்.
இவர் சலானி குழுமத்தின் (Challani Group of Companies) நிறுவனர் மற்றும் தலைவராகப் பணியாற்றுகிறார்.
முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதும், கட்சா எண்ணெய் மீதும் சரிசமமாக முதலீடு செய்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த போர் முடிவிற்கு வந்த பிறகு தங்க விலை முன்பு இல்லாத அளவிற்கு உயரும் என்று சொல்கிறார்.