பூரானை ஏன் அடிக்க கூடாது ? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க
நமது முன்னோர்கள் பூரானை அடிக்க கூடாது என சொல்லி வைத்திருக்கின்றார்கள். அதற்கு காரணம் என்ன ? இது குறித்து சிந்தித்தது உண்டா ?
பூரானின் விஷம் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? அதை ஏன் அடிக்க கூடாது என குறிப்பிடுகின்றனர் என்பது பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம்.
பூரான் கடிக்கும்போது அதில் சிறிதளவு விஷத்தன்மை இருக்கவே செய்யும். ஆனால் அது மனிதர்களைக் கடிக்கும்போது பெரிய விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை.
இதுவே சிறுவர்களை கடிக்கும் போது ஆபத்தாக அமையலாம், ஆனால் சாதாரண மனிதர்களை பொருத்த மட்டில் இது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
பூரான் கடித்துவிட்டால், அந்த இடம் சிவந்துபோவது, எரிச்சல், வலி, வீக்கம் போன்றவை ஏற்படும்.
அரிதாகச் சிலருக்கு அந்தப் பூரானின் விஷக்கடியால் உடலளவில் சில பாதிப்புகள் ஏற்படலாம்.
பூரான் கடித்த இடத்தில் Infection வராமலிருக்க...
அவை இதயம் சம்பந்தப்பட்டதாகவோ, நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்டதாகவோ, தசைகள் சம்பந்தப்பட்டதாகவோ இருக்க வாய்ப்புகள் உண்டு.
நெஞ்சு படபடப்பு, மயக்கம், பதற்றம் போன்ற அறிகுறிகள் சிலருக்கு ஏற்படலாம்.
பூரான் கடித்தால் மருத்துவரை அணுக வேண்டுமா என்றால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. பூரான் கடித்த இடத்தில் Infection வராமலிருக்க சுத்தப்படுத்திவிடுவார்.
அந்த இடத்தில் வலியோ, வீக்கமோ, எரிச்சலோ இருந்தால் ஊசி போடுவார். வலியும் வீக்கமும் குறைய அலர்ஜி மாத்திரைகள், வலி நிவாரணிகள் பரிந்துரைப்பார்.
எனவே பூரான் கடித்தால் பெரிய விளைவுகள் பெரும்பாலும் ஏற்படுவதில்லை. அதே நேரம் வேறு ஏதேனும் அறிகுறிகளை உணர்ந்தால் மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதுதான் சரி.
பூரானை ஏன் அடிக்க கூடாது ?
மேலும் பூரானை ஏன் அடிக்க கூடாது என கேட்டால் அது வீட்டினுள் வருகின்றது என்றாலே வீட்டை சுத்தப்படுத்த சொல்லி உங்களை எச்சரிக்கின்றது என்று தான் அர்த்தம்.
இது விஷப் பூச்சுகளை உணவாக உண்ணக்கூடியது, எனவே பூரான் நடமாடும் இடத்தில் நிறைய விஷத்தன்மை உடைய பூச்சிகள் வாழ்கின்றது என அர்த்தம். இது பல்லி மற்றும் எலிகளை கூட உணவாக உண்ணும்.
பூரான்களை அழித்துவிட்டால் விஷத்தன்மை உடைய பூச்சிகளின் எண்ணிக்கை தானாக அதிகரித்துவிடும், இதுவே பூரானை அடிக்க கூடாது என சொல்லப்படுவதற்கான உண்மை காரணம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |