திடீரென தீப்பற்றி எரிந்த மொபைல் போன்... மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Mobile Suddenly Exploded: இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் நோயாளி ஒருவரது போன் திடீரென தீப்பற்றி எரிந்துள்ள காட்சி பதற வைத்துள்ளது.
திடீரென வெடித்து தீப்பற்றிய போன்
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் குவாலியரின் தாட்டிபூர் பகுதியில் மருத்துவமனை ஒன்றில் காத்திருப்போர் அறையில் நோயாளிகள் அமர்ந்திருந்தனர்.
அப்பொழுது ஒருவர் தனது கையில் செல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில், திடீரென செல்போனிலிருந்து புகை கிளம்பி தீப்பற்றியுள்ளது.

ஆரம்பத்தில் அவர் அமர்ந்திருந்த சோபா செட்டில் போன் தீப்பற்றிய நிலையில், குறித்த நபர் சாதுர்யமாக செயல்பட்டு அதனை கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்ற போது அருகில் இரண்டு பேர் தங்கள் குழந்தையை வைத்திருந்தனர். ஆனால் எந்தவொரு அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறித்த போன் வெடித்ததற்கு பேட்டரி கோளாறு அல்லது அதிக வெப்பமடையும் நிலை காரணமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |