பிரபலங்கள் ஈசா மையத்திற்கு செல்வது எதனால்? பயில்வான் உடைத்த உண்மை
நடிகர் நடிகைகள் ஈசா யோகா மையத்திற்கு செல்வதற்கான காரணத்தை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
ஈசா யோகா மையம்
கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம், ஆன்மீகவாதிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சத்குரு ஜக்கி வாசுதேவ் நிர்வகித்து வரும் இந்த மையத்திற்கு 100க்கும் மேற்பட்ட மக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பிரபலங்களும் எந்தவொரு பரபரப்பும் இல்லாமல் பொதுமக்களை வந்து செல்கின்றனர். அதிலும் மகா சிவராத்திரி அன்று நடிகை தமன்னா, அமலாபால், பூஜா ஹெக்டே, சந்தானம், சங்கர் மகாதேவன், காஜல் அகர்வால் என பல பிரபலங்கள் வழக்கமாக வந்து செல்கின்றனர்.
இந்த ஆண்டும் மகா சிவராத்திரி அன்று நடிகை தமன்னா, பூஜா ஹெக்டே, சந்தானம் ஆகியோர் விடிய விடிய நடந்த பூஜைகளில் கலந்து கொண்டது புகைப்படமாக வெளியாகியிருந்தது.
நடிகர், நடிகைகள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இந்த யோகா மையத்திற்கு வந்து சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்.
பயில்வான் உடைத்த உண்மை
இந்நிலையில் பிரபல நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் அவ்வப்போது அநேக நடிகர் நடிகைகள் குறித்து பல விடயங்களை கூறி சர்ச்சையைக் கிளப்பி வருகின்றார்.
அந்த வகையில் ஈசா யோகா மையத்திற்கு பிரபலங்கள் ஏன் செல்கின்றனர் என்பதற்கும் பதில் அளித்துள்ளார்.
இவர் கூறுகையில், எப்போதும் சச்சையான விஷயங்கள் எங்கு அதிகமாக உள்ளதோ அதைத் தான் நான் தேடுவேன் என்றும் அப்படி ஏதாவது கிடைக்குமா என்ற நோக்கத்தில் தான் ஈஷா யோகா மையத்திற்கு சென்றிருந்தேன்.
அவ்வாறு எதுவும் கிடைக்காமல் தனக்கு நேர்மறை ஆற்றல் கிடைத்தது என்றும், எவ்வளவு வசதியாக இருந்தாலும் மனிதருக்கு நிம்மதி இல்லாமல் இருப்பதால் இந்த மையத்திற்கு அநேகர் வந்து செல்கின்றனர் என்று கூறியுள்ளார்.
எப்பொழுதும் எதிர்மறையாக சர்ச்சை கருத்தினை மட்டுமே பேசிவரும் பயில்வான் இவ்வாறு கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல ஏக்கர் காடுகளை அழித்து வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குறியாக்கி ஈசா யோகா மையத்தினை உருவாக்கியுள்ளதால் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோபத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |