இந்தியாவின் தோல்வி: முகமது ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் முன்னாள் பிரபலங்கள்
கடந்த நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியில், இந்தியா யாரும் எதிர்பாராத வகையில் படுதோல்வியை தழுவி இருந்தது. இதனால், அதிருப்தி அடைந்த ரசிகர்கள் இந்திய வீரர்களை வசைபாடி வந்தனர்.
இதனிடையே, பல வீரர்களை குற்றம் சாட்டினாலும் தற்போது இந்திய பவுலர் முகமது ஷமியை கடும் கண்டனம் நடத்தி வருகின்றனர். அதில், ஷமியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், குடும்பத்தினர் குறித்தும் மோசமான கருத்துக்களை பதிவிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகமது ஷமிக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கதில், முகமது ஷமி மீது நாங்கள் அனைவரும் உங்களுடன் ஆதரவாக இருக்கிறோம்.
யாரும் இவர்களுக்கு அன்பை தராததால், அவர்கள் வெறுப்பால் நிரம்பி உள்ளார்கள். அவர்களை மன்னித்து விடுங்கள் என பதிவிட்டுள்ளார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் மந்திரி உமர் அப்துல்லா தெரிவிக்கையில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இந்திய அணியில் ஷமியும் ஒருவர். ஷமி மட்டும் தனியாக விளையாடவில்லை.
சமூக வலைத்தளங்களில் ஒருவர் அறுவறுக்க ட்ரோல் செய்யும் போது, அவருக்கு ஆதரவாக நிற்காமல், கருப்பின மக்களுக்கு ஆதரவாக இந்திய அணியினர் அனைவரும் மைதனாத்தில் முழங்கால் இட்டு ஆதரவை தெரிவித்தது எந்தவிதத்திலும் பொருட்படுத்த முடியாது என கூறியுள்ளார்.
அதன் பின்னர், முன்னாள் வீரர் சச்சின் ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவை நாம் ஆதரித்தால், இந்தியா அணிக்காக விளையாடும் வீரர்களையும் நாம் ஆதரிக்க வேண்டும். ஷமி ஒரு உலகத்தரமான பந்துவீச்சாளர்.
மற்ற வீரர்களை போலவே அவருக்கும் அன்று மோசமான நாளாக அமைந்துவிட்டது. ஷமிக்கு பின்னாலும், இந்திய அணிக்கு பின்னாலும் நிற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, கவுதம் கம்பீர் பட்டாசுகளை வெடித்து கொண்டாடிய சம்பவங்கள் மிகவும் வெட்கக்கேடானது எனவும், நாட்டில் எங்காவது இதுபோன்ற சில சம்பவம் நடந்திருக்கிறது.
அது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில், நீங்கள் உங்கள் அணியை ஆதரிக்கிறீர்கள் மற்றும் தோல்வி, வெற்றி என்பது தொடர்ந்து நடந்து வருபவை தான். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததை சிலர் நடந்துகொண்ட விதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.