பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம்: சேரன் மற்றும் கமல்ஹாசனின் கண்ணீர் கலந்த இரங்கல்கள்
தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் சென்னையில் தனது இல்லத்தில் காலமானதையடுத்து திரையுலகினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை 400 க்கும் மேற்பட்டப் படங்களில் 1400 பாடல்களை எழுதியுள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
செம்பருத்தி படத்தில் ‘நடந்தால் இரண்டடி’ என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடியவர் பிறைசூடன். அதேபோல் பொங்கி வரும் காவேரி படத்தில் எல்லோரையும் உருக்கிய பாடலான மன்னவன் பாடும் பாடலை இவர்தான் எழுதியுள்ளார்.
நேற்ற மாலை திடீர் மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் மற்றும் வைரமுத்து, சேரன் இவர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் கண்ணீர் வரவழைக்கும் வகையில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிறைசூடன் என்ற
— வைரமுத்து (@Vairamuthu) October 8, 2021
அழகிய பெயருடையான்
போயுற்றான்
நல்ல மனிதனாய்
நல்ல கலைஞனாய்
அறியப்பட்டோன்
ஆவிதுறந்தான்
சிந்தனையாளன்
செயற்பாட்டாளன்
சக கவிஞர்களைக்
கொண்டாடும் கொள்கையாளன்
சென்றுவிட்டான்
தமிழோடு வாழ்வான்;
அகமே அமைதியுறுக! pic.twitter.com/mb0GFXHCUd
தன் புலமையை மறைத்துக்கொண்டு கொடுக்கப்படும் சூழல்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஏற்றபடி எழுதும் பாவலர் பிறைசூடன். இப்போது தன் பாட்டை விரும்பிக் கேட்பவர்களிடமிருந்து தன்னையே மறைத்துக்கொண்டுள்ளார். அவர் பாடல்கள் மறையா. அஞ்சலிகள்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 9, 2021
[4K2RO[