வறட்டு இருமலை இரவோடு இரவாக விரட்டி அடிக்கும் சக்திவாய்ந்த உணவுப் பொருள்
இருமலை காட்டிலும் வறட்டு இருமல் அதிக உபாதை தரக்கூடியது.
வறட்டு இருமலின் ஆரம்ப நிலையே உபாதையை உண்டாக்கும்.
இதை கவனிக்காமல் விட்டால் அவை தொண்டையில் புண்ணையும், வலியையும் உண்டாக்கும்.
இந்த நாள்பட்ட வறட்டு இருமலில் இருந்து விடுபட ஒருசில எளிய இயற்கை கை வைத்தியங்கள் உள்ளன.
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் வறட்டு இருமலை எப்படி விரட்டியடிப்பது என்று பார்க்கலாம்.
மஞ்சள் பால்
மஞ்சளில் உள்ள குர்குமினில், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. இது வறட்டு இருமலில் இருந்து விடுவிக்கும்.
அதற்கு ஒரு டம்ளர் சூடான பாலில், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
மிளகு
மிளகில் உள்ள வெப்பமூட்டும் பண்புகள், வறட்டு இருமலில் இருந்து விடுபட உதவும்.
1/2 டீஸ்பூன் மிளகுத் தூளை 1/2 டீஸ்பூன் நெய்யுடன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் வறட்டு இருமலைத் தடுக்கலாம்.