கோபம், அழுகை ஒரே நேரத்தில் வருகிறதா? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்குதான்..
“எனக்கு கோவம் வந்துச்சுன்னா, என்ன பண்ணுவேன்னு தெரியாது..” என பலரும் கூறி கேட்டிருப்போம்.
ஆம், அது உண்மை தான். சிலருக்கு கோபம் வந்து விட்டால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.
கோபம் என்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் இயற்கையாக இருக்கின்ற உணர்வு தான். ஆனால், கோபம் வருவதற்கான காரணங்கள் நபருக்கு நபர் வேறுபடுகிறது. இருந்தாலும் சிலருக்கு கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாது. கோபத்திலும் அமைதியாக இருப்பது என்பது செய்ய முடியாத காரியங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சமாளிக்க முடியாத அளவு கோபம் வந்து விட்டால் அதனை கட்டுக்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிதும் அல்ல. கோபம் வந்து விட்டால் அதனை பலரும் பல விதங்களில் வெளிகாட்டுவார்கள்.
இன்னும் சிலர் சமயம் வரும் வரை உணர்வை கட்டுப்படுத்திக் கூட வைத்திருப்பார்கள்.
அந்த வகையில் கோபம் வரும் பொழுது சிலருக்கு அழுகையும் சேர்த்து வரும், இதற்கான விளக்கத்தை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
கோபம் வெளியில் வரும் விதங்கள்
1. கோபம் என்பது உணர்ச்சியை காட்டும் உடல் மொழி என்பதால் கோபம் வந்தால் சிலர் தனியாக சென்று விடுவார்கள்.
2. தனது கோபத்தை அதிகாரமாகவும், உடல் வலிமையை வைத்து சண்டையிட்டு வெளியில் காட்டலாம்.
3. கோபம் வந்து விட்டால் இயற்கையாகவே உடல்மொழி அல்லது வாய் வழியாக வெளியில் வந்து விடும். கோபம் நன்றாக உச்சியில் இருக்கும் ஒருவர் மனதில் இருந்து யோசிக்காமல் பல வேலைகளை செய்வார்கள். இதனால் உடலில் பாகங்கள் கூட இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது.
4. இன்னும் சிலர் ஏதாவது ஒரு காரணத்திற்காக கோபம் வந்து விட்டால் மிரட்டுதல் மற்றும் தகாத வார்த்தைகளை பேசுதல் போன்ற நடத்தைகளை காட்டுவார்கள்.
காரணம்
கோபம் என்ற உணர்வு சிலருக்கு குடும்பப் பிரச்சனை, பணப் பிரச்சனை, வேலைப்பளு, காதல் உறவுகளுக்கு வரும் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் வரும். உடல்நல பிரச்சினைகள் கூட கோபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது அந்நபருக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.